“ரோகித் சர்மா அற்புதமான மனிதர் ; விராட் கோலிகிட்ட தயக்கமா இருந்துச்சு” – இந்திய பில்டிங் பயிற்சியாளர் திலிப் மனம் திறந்த பேச்சு!

0
336
Viratkohli

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் முகாமிட்டு மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாட இருக்கிறது. தற்போது இதற்கான மிகத் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு இருக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் நடைபெற இருக்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் நாளை டொமினிக்கா மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்த்து இந்திய அணி விளையாட இருக்கிறது!

- Advertisement -

ரவி சாஸ்திரி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ள, அந்தக் குழுவில் இருந்து பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் மட்டுமே தக்கவைக்கப்பட்டார். மற்ற அனைவருமே நீக்கப்பட்டார்கள்.

தற்பொழுது இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட், பேட்டிங் பயிற்சியாளராக விக்ரம் ரத்தோர், பவுலிங் பயிற்சியாளராக பராஸ் மம்பரே, ஃபீல்டிங் பயிற்சியாளராக திலிப் ஆகியோர் இருந்து வருகிறார்கள்.

தற்பொழுது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடுயூப் சேனலுக்கான நிகழ்ச்சியில், இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் திலிப்பை பேச வைத்தார்.

- Advertisement -

சில முக்கியமான விஷயங்களை பேசிய திலிப் கூறும் பொழுது ” முதலாவதாக விராட் கோலி சூப்பர் ஸ்டாராக இருப்பதால், நான் அவரை அணுகுவதற்கு கொஞ்சம் தயங்கினேன். ஆனால் கோவிட் காலங்களில் நாங்கள் காலை மற்றும் இரவு உணவு நேரங்களில் உணவு மேசைகளில் அதிகம் சந்தித்துக் கொண்டோம்.

களத்திற்கு வெளியே காபி என்று தொடர்ந்தது. இதனால் எங்களுக்குப் பிடித்தது பிடிக்காத விஷயங்கள் தெரியவந்தது. பல்வேறு விதமான தலைப்பிலான விவாதங்களில் நாங்கள் இந்த ஓய்வு காலத்தில் ஈடுபட்டு இருக்கிறோம். இதிலிருந்து அவர் ஒரு மிகவும் அற்புதமான மனிதர் என்று நான் புரிந்து கொண்டேன்.

சரியான நேரத்தில் நீங்கள் அவரை அணுகி சரியான விஷயங்களை உங்களால் சொல்ல முடிந்தால் நீங்கள் அவருக்கு நிறைய விஷயங்களை சொல்லலாம். நீங்கள் அவரைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் நீங்கள் நிச்சயம் அவருடன் நேரம் செலவிட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

ரோஹித் சர்மா ஒரு மிகச்சிறந்த அற்புதமான மனிதர். அவரிடம் நான் பார்த்த மிகப்பெரிய விஷயங்களில் ஒன்று அவர் வீரர்களுடன் நேரம் செலவு செய்ய விரும்புகிறார். அவர் வீரர்களைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள விரும்புகிறார். இதையெல்லாம் நான் புரிந்து கொண்டேன்!” என்று தெரிவித்திருக்கிறார்.

ரோகித் சர்மா குறித்து திலிப் உடைய கருத்துக்களை ரவிச்சந்திரன் அஸ்வினும் அப்படியே ஏற்றுக் கொண்டார். ரோகித் சர்மா வீரர்களை ஆதரிப்பதில் மிகவும் உறுதியாக இருப்பவர் என்பதை தெரிவித்தார். நாளை முதல் டெஸ்ட் போட்டி இந்திய வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே துவங்குகிறது!