“ரோகித் சர்மா எதுக்கு.. விராட் கோலிதான் கேப்டனா வரனும்” – தமிழக வீரர் விமர்சனம்

0
260
Virat

ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி தற்பொழுது தென் ஆப்பிரிக்காவில் அந்த அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் இன்னிங்ஸ் தோல்வியடைந்து அதிர்ச்சி கொடுத்தது. கடந்த முறை சந்தித்த தென் ஆப்பிரிக்க அணியை விட இந்த அணி அனுபவம் அற்றது.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணி எப்படியும் இந்த முறை 31 வருட சோகத்தை மாற்றி தென் ஆப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வெல்லும் என அனைவரும் எதிர்பார்த்தார்கள்.

ஆனால் முதல் டெஸ்ட் போட்டியில் தோற்று தொடரை இதற்கு மேல் வெல்ல முடியாத இடத்திற்கு இந்திய அணி சென்றுவிட்டது. மூன்றாம் தேதி கேப்டவுன் மைதானத்தில் துவங்க இருக்கும் இரண்டாவது போட்டியில் வென்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும்.

மேலும் ரோகித் சர்மா கேப்டன் ஆகவும் மற்றும் துவக்க ஆட்டக்காரராகவும் முதல் டெஸ்டில் பலவீனமான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருந்தார். பல முன்னணி வீரர்களால் இது விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணிக்காக விளையாடி உள்ள தமிழகத்தைச் சேர்ந்த பத்ரிநாத் இது குறித்து கூறும் பொழுது “விராட் கோலி ஒரு டெஸ்ட் கேப்டனாக சிறந்த சாதனை படைத்திருக்கிறார். அவர் 52 ரன் ஆவரேஜில் ஐயாயிரம் ரன்களுக்கு மேல் குவித்திருக்கிறார். மொத்தமாக 68 டெஸ்டில் 40 வெற்றிகள் மற்றும் 17 தோல்விகள் மட்டுமே அவரிடம் இருக்கிறது. கிரீம் ஸ்மித், ரிக்கி பாண்டிங் மற்றும் ஸ்டீவ் வாக் இவர்களுக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பெற்றவர்.

விராட் கோலி ஏன் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இல்லை? என்கின்ற கேள்வியை எழுப்ப விரும்புகிறேன். அவர் ஒரு சிறந்த பேட்டர். விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இடையே ஒப்பீடு வைக்க முடியாது. அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவை விட சிறந்தவர். பலவீனமான ஒரு பேட்ஸ்மேன் கேப்டனாக இருக்கும் பொழுது இவர் ஏன் கேப்டனாக இல்லை?

என்னைப் பொறுத்தவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா நிரூபிக்கப்படப்படாத ஒரு வீரராக தான் இன்னும் இருக்கிறார். அவர் வெளிநாட்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னும் தன்னை நிரூபிக்கவும் இல்லை. எனவே அவரை விட விராட் கோலியே சிறந்தவர்!” என்று கூறி இருக்கிறார்!