2027 உலக கோப்பை வரை இல்லை.. இந்த விஷயம் எனக்கு நடக்கலனா ஒருநாள் தொடரிலும் ஓய்வு பெறுவேன் – ரோஹித் சர்மா பேட்டி

0
814

இந்திய கிரிக்கெட் அணியின் மகத்தான கேப்டன் ரோஹித் சர்மா சமீபத்தில் டெஸ்ட் பார்மெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இந்த சூழ்நிலையில் ஒரு நாள் வடிவத்தில் ஓய்வு பெறுவது குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

ரோஹித் சர்மா பேட்டி

இந்திய கிரிக்கெட் அணியின் மகத்தான கேப்டனாக திகழ்ந்து வரும் ரோஹித் சர்மா கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் கோப்பையை வென்ற பின்னர் டி20 ஃபார்மெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவரைத் தொடர்ந்து விராட் கோலி ஓய்வு முடிவை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பிறகு டெஸ்ட் ஃபார்மேட் மற்றும் ஒரு நாள் வடிவ தொடரில் மட்டும் ரோஹித் சர்மா விளையாடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழ்நிலையில் ரோகித் சர்மா சமீபத்தில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மோசமாக விளையாடியதன் விளைவாக டெஸ்ட் ஃபார்மேட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்தார். இந்த சூழ்நிலையில் தனது ஓய்வு குறித்து மனம் திறந்து பேசி இருக்கும் ரோஹித் சர்மா ஒரு நாள் தொடரில் ஓய்வு பெறுவது குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

ஒருநாள் கிரிக்கெட்டில் ஓய்வு

இதுகுறித்து ரோஹித் சர்மா பேசும்போது “நான் முன்பு போலவே விளையாடி வருகிறேன், முதலில் என் நேரத்தை எடுத்துக் கொள்வேன். முதல் 10 ஓவர்களில் 30 பந்துகள் விளையாடுவேன். ஆனால் இப்போது 20 பந்துகள் விளையாடினால் ஏன் என்னால் 30, 35 மற்றும் 45 ரன்கள் கூட எடுக்க முடியாது? நான் வேகமாக விளையாட துவங்கும் நாட்களில் ஆக்சிலரேட்டரை தட்டி முதல் 10 ஓவர்களில் 80 ரன்கள் எடுப்பது என்பது மோசமான விஷயம் அல்ல.

இதையும் படிங்க:13 வயசில் யோசிக்க வச்சீங்க.. எங்க தலைமுறை உங்களுக்காக இதை நிச்சயம் செய்யும்.. கோலி குறித்து சுப்மான் கில் உணர்ச்சி பதிவு

நான் இப்போது அப்படித்தான் நினைக்கிறேன். இப்போது நான் வேறு வழியில் கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன். இதை எதையும் நான் சாதாரணமாக எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. விஷயங்கள் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கும் என்று நினைக்காதீர்கள். நான் முதலில் 20 முதல் 30 ரன்கள் எடுத்துவிட்டு அதற்கு பின்னர் அதிரடியாக விளையாட துவங்குவேன். மைதானத்தில் எனக்கு தோன்றுவதை எப்போது செய்ய முடியவில்லை என்று நினைக்கிறேனோ அப்போது நான் விளையாடுவதை நிறுத்தி விடுவேன். அது நிச்சயம். ஆனால் நான் இப்போது விளையாடி வருவது அது அணிக்கு மிகவும் உதவியாக இருக்கும்” என்று எனக்குத் தெரியும் என ரோகித் சர்மா பேசியிருக்கிறார். ரோகித் சர்மா 2027 ஆம் ஆண்டு ஒரு நாள் உலகக் கோப்பை வரை விளையாடுவார் என்று எதிர்பார்க்கும் நிலையில் ரோஹித் சர்மாவின் கருத்துக்கள் சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

- Advertisement -