சிட்னி டெஸ்டில் கம்பீர், அகர்கர் உடன் எனக்கு சண்டை வந்தது உண்மைதான்.. ஒரு முடிவோடுதான் விலகினேன் – ரோகித் ஓபன் டாக்

0
653

கடந்த ஆண்டின் இறுதியில் துவங்கிய இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்து தொடரை இழந்தது.

இந்த சூழ்நிலையில் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து ரோஹித் சர்மா விலகியது குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

ஐந்தாவது டெஸ்டில் விலகிய ரோஹித்

கடந்த ஆண்டின் இறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து பார்டர் கவாஸ்கர் டிராஃபியான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. அதில் இரண்டாவது போட்டியில் கலந்து கொண்ட ரோகித் சர்மா அதற்குப் பின்னர் மூன்று போட்டிகளில் விளையாடி பெரிய ரன்கள் எதுவும் அடிக்கவில்லை. மாறாக அவரது கேப்டன்ஷியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. மேலும் 6 இன்னிங்ஸ்களில் விளையாடி மொத்தமாக 91 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இந்த சூழ்நிலையில் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இருந்து தான் விலகுவதாக ரோகித் சர்மா அறிவித்த நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வு பெறுவார் என்ற வதந்திகளும் கிளம்பியது. அவர் ஐந்தாவது போட்டியில் இருந்து விலகிய நிலையில் அவருக்கு பதிலாக பும்ரா கேப்டன் பொறுப்பை எடுத்து அணியை வழிநடத்தினார். இந்த சூழ்நிலையில் ஐந்தாவது போட்டியில் விலகியது குறித்து ரோகித் சர்மா தற்போது மனம் திறந்து முதன் முறையாக பேசி இருக்கிறார்.

- Advertisement -

வாக்குவாதம் நடந்தது உண்மைதான்

இதுகுறித்து அவர் விரிவாகக் கூறும்போது “நான் அந்த சமயத்தில் எனக்குள் நேர்மையாக இருக்க வேண்டி இருந்தது. மற்ற வீரர்களும் போராடிக் கொண்டிருந்ததால் நான் அந்த இடத்தில் என்னை நிலை நிறுத்த விரும்பவில்லை. எனவே அந்த போட்டியில் நாங்கள் கில் விளையாட வேண்டும் என்று விரும்பினோம். கில் சிறப்பான வீரராக இருந்ததால் கடைசி டெஸ்ட் போட்டியில் அவர் விளையாட வேண்டும் என்று நாங்கள் ஆசைப்பட்டோம். நான் சிறப்பாக விளையாடவில்லை என்றால் விஷயங்கள் மாறக்கூடும் எனவே இது குறித்து நான் பயிற்சியாளர் மற்றும் தேர்வாளரிடம் பேசினேன்.

இதையும் படிங்க:பேட்டை செக் பண்றதுல இப்படி ஒரு காரணம் இருக்கா.. பிசிசிஐ கிடுக்குப்பிடி ஏன்?.. வெளியிட்டுள்ள தகவல்

ஆனால் அதற்கு இவர்கள் உடன்படவில்லை. இந்த விஷயத்தை சுற்றி எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. நீங்கள் எப்போதுமே அணியை முதன்மையாக வைத்து அதற்கு ஏற்றவாறு முடிவுகளை எடுக்க வேண்டும். சில நேரங்களில் நீங்கள் முடிவெடுத்தது போன்று நன்றாக வேலை செய்யும். ஆனால் சில சமயங்களில் அது வேலை செய்யாது” என்று ரோஹித் சர்மா பேசியிருக்கிறார். ரோகித் சர்மா ஐந்தாவது போட்டியில் இருந்து விலகினாலும் இந்திய அணி தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது

- Advertisement -