பேட்டை செக் பண்றதுல இப்படி ஒரு காரணம் இருக்கா.. பிசிசிஐ கிடுக்குப்பிடி ஏன்?.. வெளியிட்டுள்ள தகவல்

0
252
Ipl

நடப்பு ஐபிஎல் தொடரில் பேட்ஸ்மேன்களின் பேட் பரிசோதிக்கப்படுகிறது. தற்பொழுது இதற்கான காரணத்தை பிசிசிஐ விளக்கமாக வெளியிட்டிருக்கிறது. இதற்குப் பின்னால் பந்துவீச்சாளர்களை பாதுகாக்கும் முயற்சியும் அடங்கி இருக்கிறது.

திடீரென இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னால் ஐபிஎல் தொடரில் நடுவர்கள் வீரர்களின் பேட்டை வாங்கி பேட் கேஜ் எனும் கருவியை வைத்து பரிசோதித்தார்கள். இது எதற்காக என ரசிகர்களுக்கு ஆரம்பத்தில் புரியாமலே இருந்து வந்தது. தற்பொழுது இதற்கான காரணம் என்னவென்று பிசிசிஐ கூறியிருக்கிறது.

- Advertisement -

பிசிசிஐ பவுலர்களுக்கு தரும் முக்கியத்துவம்

ஒரு பக்கத்தில் ஐபிஎல் தொடர் முழுக்க முழுக்க பேட்ஸ்மேன்களுக்கு சாதகம் ஆகிவிட்டது என்கின்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. ஆடுகளத்தை கொஞ்சம் பந்துவீச்சுக்கு சாதகமாக அமைத்தாலும் கூட, பெரும்பாலும் இந்திய மைதானங்கள் சிறியதாக இருக்கின்ற காரணத்தினால் எளிதாக சிக்ஸர்கள் அடிக்க முடிகிறது. எனவே தற்போது மைதானங்களை உடனடியாக பெரிது படுத்துவது கடினமான விஷயம்.

இதன் காரணமாக போட்டியின் போது பனிப்பொழிவின் காரணமாக பந்துவீச்சாளர்களுக்கு ஏற்படும் சிரமத்தை குறைப்பதற்காக, டாசை வென்றால் தோற்றால் என இரண்டுக்கும் தகுந்தது போல் பிளேயிங் லெவனை தேர்வு செய்து கொள்ள கடந்த இரண்டு வருடங்களாக பிசிசிஐ அனுமதி அளித்திருக்கிறது. மேலும் இந்த ஆண்டு பந்தின் மீது எச்சில் தடவவும் அனுமதி கொடுத்திருக்கிறது. மேலும் இரண்டு பவுன்சர்கள் வீசலாம் என விதி தளர்த்தப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் பிசிசிஐ பேட்டுக்கும் பந்துக்குமான போட்டியை சமநிலைப்படுத்த முயற்சி செய்கிறது.

- Advertisement -

பேட் பரிசோதிக்கப்படுவதின் காரணம்

பேட்ஸ்மேன்கள் பயன்படுத்தும் பேட்டில் ஸ்வீட் பார்ட் எனப்படும் நடுப்பகுதிக்கும் கீழ் பகுதிக்கும் நடுவில் இருக்கும் பகுதியாகும். இந்தப் பகுதியில் பந்தை அடிக்கும் பொழுது பந்து வெகு தூரம் செல்லும் வேகமாகவும் செல்லும். எனவே பந்தை தூரமாக அடிப்பதற்கு இந்த பகுதியை இஷ்டத்திற்கு பெரிதாக அமைத்துக் கொள்கிறார்கள். இதன் மூலம் பந்தை தட்டினாலே பறந்து விடுகிறது.

இதையும் படிங்க : ஐபிஎல் தொடரில் ஒரு மர்ம மனிதர்.. வீரர்கள் முதல் வர்ணனையாளர்கள் வரை யாரும் தொடர்பு கூடாது – பிசிசிஐ எச்சரிக்கை

தற்பொழுது பிசிசிஐ வெளியிட்டுள்ள காரணத்தில் ” பேட்ஸ்மேன்களுக்கும் பந்துவீச்சாளர்களுக்கும் சரியான முறையில் நியாயம் கொடுக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். யாரும் இங்கு கூடுதல் சலுகையை அடைய முடியாது. எனவே பேட்டின் கீழே தடிமனாக வைத்துக் கொள்ள முடியாது. அப்படி பேட்ஸ்மேன் கொண்டு வந்தால் உடனடியாக பரிசோதிக்கப்பட்டு வேறு பேட் மூலம் விளையாட வைக்கப்படும்” என்று கூறப்பட்டிருக்கிறது.

- Advertisement -