அடுத்த பும்ரா கில் ஜெய்ஸ்வால் மாதிரி.. பிளேயர்ஸ் வரதுக்கு இந்த ஏற்பாடு செய்றேன் – ரோஹித் சர்மா பேட்டி

0
224
Rohit

இது அணியின் கேப்டன் மகாராஷ்டிராவில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது சில முக்கியமான விஷயங்கள் குறித்து பேசி இருக்கிறார்.

இன்று ரோகித் சர்மா மகாராஷ்டிராவில் ஒரு கிரிக்கெட் நிகழ்வில் கலந்து கொண்டார். அந்த நிகழ்வில் அவரை காண்பதற்காக மக்கள் கூட்டம் பெரிய அளவில் திரண்டு வந்தது. மேலும் பொதுமக்கள் உலகக் கோப்பை தொடர்பாக அவரிடம் முக்கியமான கோரிக்கையையும் வைத்தார்கள்

- Advertisement -

மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க தலைவர் கோரிக்கை

மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க தலைவர் ரோகித் பவர் இன்னொரு உலகக்கோப்பை தங்களுக்கு வேண்டுமென்றும் அந்த உலகக்கோப்பையில் கேப்டனாக இருந்து ரோஹித் சர்மா பெற்று தர வேண்டும் எனவும் தன்னுடைய பேச்சின் போது கோரிக்கை வைத்தார்.

மேலும் அங்கு கூடியிருந்த மக்கள் ரோகித் சர்மாவை இன்னொரு டி20 உலக கோப்பையில் இந்திய அணியை கேப்டனாக வழி நடத்துமாறு கேட்டுக் கொண்டார்கள். ரோகித் சர்மா அதற்கு சிரித்தபடி எந்தவிதமான பதிலையும் கூறாமல் நின்றுவிட்டார்.

- Advertisement -

அடுத்த கில் பும்ரா ஜெய்ஸ்வால்

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இந்தியா மட்டும் இல்லாமல் உலகின் பிற பகுதிகளிலும் கிரிக்கெட் அகாடமிகளை துவங்கி வருகிறார். கடந்த டி20 உலக கோப்பை தொடரின் போது அமெரிக்காவில் தன்னுடைய கிரிக்கெட் அகாடமியை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இந்திய கேப்டன் ரோஹித் சர்மா கூறும் பொழுது “தற்போது கஜிரத் நகரில் கிரிக்கெட் அகாடமி துவங்கப்படுகிறது. நான் உங்களுக்கு ஒரு உறுதி கூறுகிறேன். இந்த கிரிக்கெட் அகாடமியில் இருந்து அடுத்த பும்ரா, கில், ஜெய்ஸ்வால் மாதிரியான மிகத் திறமையான இளம் வீரர்கள் உருவாக்கப்படுவார்கள்” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : இந்திய அணிதான் கெத்து.. அஸ்வின் ஜடேஜாவை பார்த்து நம்ம பாகிஸ்தான் வீரர்கள் இத கத்துக்கணும் – ரமிஷ் ராஜா கருத்து

இந்திய அணி அடுத்து அக்டோபர் 16ஆம் தேதி முதல் நியூசிலாந்து அணிக்கு எதிராக உள்நாட்டில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. அதற்கு முன்பாக அக்டோபர் 6ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக விளையாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -