இந்திய கிரிக்கெட் அணியின் மகத்தான வீரர்களில் ஒருவரான ரோகித் சர்மா தற்போது டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் இருந்து ஓய்வு பெற்று ஒருநாள் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார்.
2027 ஆம் ஆண்டு ஒரு நாள் உலகக் கோப்பையை வெல்வது தனது கடைசி இலக்கு என விளையாடி வரும் ரோஹித் சர்மா கிரிக்கெட் குறித்து சில முக்கிய கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்.
இந்திய கேப்டன்களில் மகத்தான வீரராக விளங்கிய ரோஹித் சர்மா மகேந்திர சிங் தோனிக்குப் பிறகு கடந்த 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை வென்று வரலாறு படைத்தார். தொடர்ந்து டெஸ்ட் தொடரில் விளையாடி வந்த அவர், மோசமான பேட்டிங் காரணமாக இங்கிலாந்து டெஸ்ட் தொடரோடு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஒரு வீரராக மட்டுமே விளையாடி வரும் அவர், 2027ஆம் ஆண்டு ஒரு நாள் உலகக் கோப்பையை வெல்வதே தனது முக்கியமான விருப்பங்களில் ஒன்று என்று தனது ஆசையை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த சூழ்நிலையில் தான் கேப்டனாக செயல்பட்ட 2023 ஆம் ஆண்டு ஒரு நாள் உலகக் கோப்பை தொடரில் கடைசி போட்டி தோல்வி அடைந்த போது இனி கிரிக்கெட்டு விளையாடக்கூடாது என்று நினைத்தேன். அந்த அளவுக்கு அந்த தோல்வி எனக்கு மோசமான அனுபவத்தை கொடுத்தது என்று ரோகித் சர்மா பேசியிருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும் போது “2023 ஆம் ஆண்டு ஒரு நாள் உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு நான் மிகவும் கலக்கமடைந்தேன். இனி கிரிக்கெட்டே விளையாட கூடாது என்று மனநிலைக்கு என்னை அது மாற்றியது. ஏனென்றால் அது என்னிடமிருந்து எல்லாவற்றையும் பறித்தது. நான் மீண்டு வர எனக்கு சிறிது நேரம் பிடித்தது. ஏனென்றால் ஒரு நாள் உலகக் கோப்பை என்பது நான் உண்மையிலேயே மிகவும் விரும்பும் ஒன்று.
இதையும் படிங்க:ஐபிஎல் ஓனருக்காகவே டி20 டீம்ல கில்லுக்கு இடம் தந்தாங்க.. இங்க நடக்கிறது எல்லாமே இதுதான் – அதுல் வாஸன் பேச்சு
அது எனக்கு முன்னால் இருக்கிறது என்பதை நான் நினைவு படுத்திக் கொண்டே இருந்தேன். அதை அவ்வளவு எளிதாக விட்டுவிட முடியவில்லை. சோர்வடைந்த பின்னர் நான் மீண்டும் மெதுவாக எனது சக்தியை கண்டுபிடித்தேன். மீண்டும் எனக்கான வழியை பெற்று மைதானத்தில் செயல்பட தொடங்கினேன்” என்று பேசுகிறார்.






