ஐபிஎல் ஓனருக்காகவே டி20 டீம்ல கில்லுக்கு இடம் தந்தாங்க.. இங்க நடக்கிறது எல்லாமே இதுதான் – அதுல் வாஸன் பேச்சு

0
88
Gill

இந்திய டி20 அணியில் ஐபிஎல் மார்க்கெட் மதிப்புக்காகவே சுப்பன் கில்லுக்கு இடம் கொடுக்கப்பட்டது என இந்திய முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அதுல் வாஸன் விமர்சனம் செய்திருக்கிறார்.

தற்போது டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் அதிரடியாக சுப்மன் கில் நீக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு கொடுக்கப்பட்ட அதிகபட்ச வாய்ப்புகளில் அவர் சரியாக செயல்படவில்லை. அதேவேளையில் கேப்டன் சூரியகுமார் யாதவ் பேட்டிங் ஃபார்ம் மிக மோசமாக இருக்கிறது. எனவே ஒரே அணியில் இப்படியான இரண்டு பேரை வைத்திருக்க இந்திய தேர்வுக்குழு விரும்பவில்லை.

- Advertisement -

இது முடியாத விஷயம்

தற்போது ஒரு வீரர் மூன்று வடிவத்திலும் விளையாடுவது மிகவும் கடினமான விஷயம் என்றும் மேலும் ஒரு ஐபிஎல் அணியின் உரிமையாளர் தன் அணியில் இருந்து ஒரு முக்கியமான வீரர் இந்திய டி20 அணியில் இருக்க வேண்டும் என விரும்புகிறார் என்றும், அது அவர்களது சந்தை மதிப்பை அதிகரிக்கும் என்றும் கூறியிருக்கிறார்.

இது குறித்து அதுல் வாஸன் பேசும்போது “தற்போது கில் நீக்கப்பட்டிருக்கிறார். என்று கூறுகிறார்கள். நான் அப்படி சொல்ல மாட்டேன். ஆனால் என் பார்வையில் ஒருவர் டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்து கொண்டு எல்லா வடிவத்திலும் விளையாடுவது என்பது முடியாத காரியம். ஏனென்றால் ஒவ்வொரு வடிவத்திற்கும் தகுந்தது போல் பேட்டிங்கை மாற்றிக் கொள்வது மிகவும் கடினம்”

- Advertisement -

இனி இப்படித்தான் இருக்க வேண்டும்

“கில் டி20 கிரிக்கெட் விளையாடுவதற்கு ஐபிஎல் விளையாடிக் கொள்ளட்டும். ஐபிஎல் காரணமாக தற்பொழுது என்ன மாதிரியான அழுத்தம் வருகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஏனென்றால் ஒவ்வொரு ஐபிஎல் உரிமையாளரும் தங்கள் அணியின் முன்னணி வீரர் இந்திய டி20 அணியில் இருக்க வேண்டும் என விரும்புவார்கள். அது அந்த அணியின் சந்தை மதிப்பை அதிகரிக்கிறது”

இதையும் படிங்க: கிரிக்கெட்டில் இந்தியாவை பார்த்து பாகிஸ்தான் திருந்தனும்.. நான் அதைத்தான் செய்தேன் – அகிப் ஜாவேத் பேட்டி

“எனவே கில் தன்னை இனி டி20 இந்திய
அணியில் இருந்து தள்ளி வைத்துக் கொண்டு, மற்ற வடிவங்களில் கவனம் செலுத்த வேண்டும். இனி டி20 அணியில் முழுக்க முழுக்க டி20 ஸ்பெஷலிஸ்ட் வீரர்கள் இருக்க வேண்டும். எதிர்காலம் இப்படியாகத்தான் இருக்கப் போகிறது. எல்லோரும் இப்படித்தான் இருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -