“ஸ்டார் எல்லாம் கிடையாது.. முதல்ல பிளேயரை மதிக்கனுங்க” – ரோகித் சர்மா பரபரப்பான கருத்து

0
459
Rohit

இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ரோஹித் சர்மாவின் கேப்டன்சிக்கு பெரிய சவாலான தொடராக அமைந்திருக்கிறது.

இந்த ஒட்டுமொத்த தொடரில் இருந்து விராட் கோலி மொத்தமாகவே வெளியேறி இருக்கிறார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கேஎல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா கிடைக்கவில்லை. மேலும் மூன்று போட்டிகளுக்கு அவர்கள் தற்போது கிடைத்திருந்தாலும், கடைசி நேரத்தில்தான் அவர்கள் உடல்தகுதி குறித்து முடிவெடுக்கப்படும்.

- Advertisement -

ஐபிஎல் தொடர் மற்றும் டி20 உலகக் கோப்பை தொடர் வருகின்ற காரணத்தினால் ஜஸ்பிரித் பும்ராவுக்கும் ஓய்வு தர வேண்டிய கட்டாயம் இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு இருக்கிறது.

எனவே ரோஹித் சர்மா இளம் வீரர்களைக் கொண்டு அதிரடியாக விளையாடும் இங்கிலாந்து அணிக்கு எதிராக தொடரை கைப்பற்ற வேண்டிய நிலையில் இருக்கிறார்.

பெரிதும் அனுபவம் இல்லாத இளம் வீரர்கள் மீது அழுத்தத்தை கொடுத்து வழி நடத்திச் சென்று வெற்றி அடைய முடியாது. அதே சமயத்தில் அணிக்கு என்ன தேவை என்பதையும் அவர்களுக்கு புரிய வைத்து, அவர்களிடமிருந்து சிறந்ததை பெற வேண்டும். எனவே ஒரு கேப்டனாக இந்த தொடர் ரோஹித் சர்மாவுக்கு சவால் ஆனதாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

இதுகுறித்து ரோஹித் சர்மா கூறும் பொழுது “ஒரு கேப்டனாக, அவர்களுக்கு நம்பிக்கை கொடுப்பதும், அவர்கள் போட்டியில் என்ன மாதிரியான பங்களிப்புகள் கொடுத்திருக்கிறார்கள் என்பதை பொருட்படுத்தாமல் அவர்களுக்கு மதிப்பளிப்பதும் மிகவும் முக்கியம். ஒரு வீரர் பத்து பந்துகள் விளையாடினாலும் கூட, அணியின் வெற்றிக்கு அவரது பங்களிப்பு முக்கியமானதுதான்.

ஒவ்வொரு வீரர்களுடனும் தனித்தனியாக தொடர்பு கொள்வது, அவர்களது கவலைகளைப் புரிந்து கொள்வது, மேலும் அவர்களது இடத்திற்கு உறுதியளிப்பது ஆகியவற்றை கேப்டனாக செய்வது அவசியம். குறிப்பாக சவாலான சூழ்நிலைகளில் வீரர்களை நம்ப வைத்து நம்பிக்கை கொடுப்பது முக்கியமானது.

இதையும் படிங்க : இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முதல் வாய்ப்பு.. யார் இந்த ஆகாஷ் தீப்.. ஆல் ரவுண்டராக முடியுமா

நம்முடைய நம்பிக்கை என்பது கடுமையான முன்னேற்பாடுகளில் தயாரிப்புகளில் இருந்துதான் வருகிறது. பேட்டிங் செய்வதற்கு பாதகமான சூழ்நிலைகளில் சவால்களில் இருந்துதான் நான் நல்ல முறையில் வருகிறேன். எனவே என் தன்னம்பிக்கையை நான் அதிகப்படுத்தி கொள்ள, நான் என்னுடைய விரிவான தீவிரமான பயிற்சியை நம்பி இருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.