சிஎஸ்கே ஸ்டீபன் பிளமிங்.. இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் ஆகிறாரா?.. வெளியான புதிய தகவல்கள்

0
458
Fleming

தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட்டின் பயிற்சி காலம் டி20 உலகக் கோப்பையுடன் முடிவுக்கு வருகிறது. இந்த நிலையில் புதிய பயிற்சியாளராக சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் நியூசிலாந்தின் ஸ்டீபன் பிளமிங் பிசிசிஐ விரும்புகிறது என்கின்ற தகவல் வருகிறது. மேலும் பிசிசிஐ அவருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

2009 ஆம் ஆண்டு முதல் சிஎஸ்கே அணி உடன் இணைந்து ஸ்டீபன் பிளமிங் பயிற்சியாளராக இருந்து வருகிறார். இவருடைய வெற்றிகரமான பயிற்சியாளர் வாழ்க்கையில் சிஎஸ்கே அணி ஐந்து முறை கோப்பையை வென்று இருக்கிறது.

- Advertisement -

மேலும் சூப்பர் கிங்ஸ் அணி உரிமையாளர் அமெரிக்காவில் எம்எல்சி தொடரில் வாங்கி உள்ள அணிக்கும் தென் ஆப்பிரிக்கா தொடரில் வாங்கியுள்ள அணிக்கும் ஸ்டீபன் பிளமிங் பயிற்சியாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது மட்டும் இல்லாமல் அவர் இங்கிலாந்தின் 100 பந்து தொடரில் சதர்ன் பிரேக் அணிக்கும் பயிற்சியாளராக இருந்து வருகிறார். இந்த வகையில் அவர் நான்கு பெரிய தொடர்களில், நான்கு பெரிய அணிகளுக்கு தற்பொழுது பயிற்சியாளர் பொறுப்பை கவனித்து வருகிறார்.

தற்பொழுது மாறிவரும் கிரிக்கெட்டுக்கு ஏற்ப, அணியை உருவாக்குதல், புதிய திட்டங்களை கொண்டு வருதல், வீரர்களை சரியாக நிர்வகித்தல் போன்றவற்றுக்காக, ஸ்டீபன் பிளமிங்கை பிசிசிஐ விரும்புவதாக செய்திகள் குறிப்பிடுகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : டி20 உ.கோ அரை இறுதிக்கு ரிசர்வ் டே கிடையாது.. ஐசிசி செய்த மாற்று ஏற்பாடு.. காரணம் என்ன?

அதே சமயத்தில் ஸ்டீபன் பிளமிங் இது குறித்து தனது சிஎஸ்கே அணி நிர்வாகத்துடன் எந்தவித பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை என்றும், மேலும் இந்திய தலைமை பேச்சாளர் பதவிக்கு அவர் விண்ணப்பிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால் நிச்சயம் இது சம்பந்தமான பேச்சு வார்த்தைகள் செல்லும் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது.