இந்திய அணி 13 வருடங்கள் கழித்து ரோகித் சர்மா தலைமையில் உலகக் கோப்பை தொடரை கைப்பற்றியது. இந்திய கிரிக்கெட்டுக்கு நீண்ட வருடங்களாக இருந்து வந்த உலகக் கோப்பை வறட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய கேப்டன் ரோகித் சர்மாவிடம் நிறைய கேள்விகள் முன்வைக்கப்பட்டது.
2021 ஆம் ஆண்டு விராட் கோலி 3 வடிவ இந்திய கிரிக்கெட் அணிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகிக் கொண்ட பிறகு, புதிய கேப்டனாக ரோகித் சர்மா கொண்டுவரப்பட்டார். அணிக்குள் புதிய வீரர்களை கொண்டு வருவதுடன், அணிக்குப் புதிய கலாச்சாரம் மற்றும் புதிய அணுகுமுறையை உருவாக்க வேண்டிய பொறுப்பும் இருந்தது.
இந்திய கேப்டன் ரோகித் சர்மா தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உடன் இணைந்து சிறப்பான முறையில் இந்திய அணியின் தேவைகளை நிறைவேற்றினார். இந்த நிலையில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரை வென்று, இந்திய கிரிக்கெட்டுக்கு இருந்த உலகக் கோப்பை வறட்சியையும் நீக்கி இருக்கிறார்.
இந்த நிலையில் அமெரிக்காவில் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவரிடம் டி20 உலக கோப்பையை வென்ற அணியில் இடம் பிடித்திருந்த வீரர்களில் அவருக்கு தனிப்பட்ட முறையில் யாரை பிடிக்கும் என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. மேலும் அவர் ஓய்வு குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்து பேசி இருக்கும் இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறும் பொழுது அவருடைய பாணியில் நகைச்சுவையாக கூறினார். ரோகித் சர்மா பேசும்பொழுது ” டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்று இருந்த 15 பேரில் என்னைத் தவிர மற்ற 14 பேரையுமே எனக்கு பிடிக்கும். மேலும் ஒரு கேப்டனாக முன் உதாரணமாக இருந்து அணியை வழிநடத்த விரும்பினேன். அத்தோடு என் அணி வீரர்களை நண்பர்களாகவும் என் அணியை ஒரு குடும்பம் போலவும் வைத்திருக்கவே பயிற்சிகள் செய்தேன்.
இதையும் படிங்க : ரிங்கு சிங்கிட்ட அந்தவொரு தப்பை கண்டுபிடிக்கவே முடியல.. ப்யூச்சர்ல இது நடக்க போகுது – விக்ரம் ரத்தோர் பேச்சு
டி20 உலகக் கோப்பையில் அமெரிக்க அணி மிகச் சிறப்பாக விளையாடியது. அந்த அணியில் நிறைய இந்திய வீரர்கள் இருக்கிறார்கள். இது நல்ல விஷயமாக இருக்கிறது. மேலும் நான் எப்பொழுதும் விளையாட்டை ஊக்குவிக்க கூடியவன். நான் சமீப காலமாக நல்ல முறையில் பேட்டிங் செய்து வருவதாக நினைக்கிறேன். எனவே இன்னும் கொஞ்ச காலம் நான் விளையாடுவதை நீங்கள் பார்க்கலாம்” என்று கூறி இருக்கிறார்






