இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி காலத்தில் வேண்டுமென்று சண்டையை இழுப்பதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் பின்ச் தெரிவித்திருக்கிறார்.
ஆஸ்திரேலியா அணிக்கு கடந்த டெஸ்டில் அறிமுகமான 19 வயது இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் இடம் விராட் கோலி சண்டையை உருவாக்கினார். இதற்காக அவருக்கு சம்பளத்தில் இருந்து 20% அபராதம் விதிக்கப்பட்டது. ஒரு போட்டியில் விளையாடுவதில் இருந்து தடை வரும் என்று எதிர்பார்க்கப்பட்டதிலிருந்து தப்பினார்.
மிகவும் மோசமான நிலை
விராட் கோலியின் தனிப்பட்ட பேட்டிங் அணுகுமுறை மிகவும் மோசமாக இருந்து வருகிறது. அதே சமயத்தில் களத்தில் அவர் எப்போதும் போல ஆக்ரோஷமாகவும் இருந்து வருகிறார். இன்னும் அவர் கூடுதல் ஆக்ரோஷத்துடன் இருக்கிறார் என்றும் சொல்லலாம். ரன்கள் வராத பொழுதும் அவர் இவ்வாறு ஆக்ரோஷமாக ஏன் இருக்கிறார்? என்பது ரசிகர்களுக்கு குழப்பமாக இருந்து வந்தது.
தற்போது விராட் கோலியின் களத்தில் இவ்வாறு அதிகப்படியான ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துகிறார் என்பது குறித்து ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன பின்ச் தனது கருத்தை கூறியிருக்கிறார். விராட் கோலி வேண்டுமென்றே இவ்வாறு சண்டையை இழுப்பதாகவும் அதற்கு பின்னணியில் ஒரு காரணம் இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
விராட் கோலி சண்டை இழுக்கும் காரணம்
இது குறித்து ஆரோன் பின்ச் கூறும் பொழுது “விராட் கோலி எப்பொழுதும் அழுத்தம் இருக்கும் பொழுது மிகவும் சிறப்பாக செயல்பட கூடியவராக இருந்திருக்கிறார். அவர் அவ்வாறான நிலைமையில் மிகவும் செழித்து வளரக்கூடியவர். இதன் காரணமாக வேண்டுமென்றே அழுதத்தை உருவாக்க சண்டையை இழுக்கிறார் என்று நினைக்கிறேன்”
இதையும் படிங்க : ரோகித் இதை செஞ்சா நான் ஆச்சரியப்பட மாட்டேன்.. 40 வயசுல பெஞ்சில் இருக்க வேண்டாம் – ரவி சாஸ்திரி பேச்சு
“அவர் விரோதமாகவும் கிட்டத்தட்ட சண்டையை தாமாக முன்வந்து இழுக்கவும் முயற்சி செய்கிறார் என்று நினைக்கிறேன். ஏனென்றால் யாராவது அவரிடம் மோதினால் அவர் சிறப்பாக விளையாடுகிறார். அப்போதுதான் எல்லா திறமையும் காட்டுகிறார். எனவே இதற்காக அவர் திட்டமிட்டு இப்படியான வேலைகளில் ஈடுபடுகிறார் என்பது தான் என்னுடைய கருத்து” என்று தெரிவித்திருக்கிறார்.






