இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தற்போது வெற்றி இலக்கை நோக்கி பேட்டிங் செய்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவானை பின்னுக்குத் தள்ளி ஒரு புதிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறார்.
இந்தியா இங்கிலாந்து ஒருநாள் தொடர்
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டி20 தொடர் விளையாடி முடித்த நிலையில், தற்போது இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 304 ரன்கள் குவித்துள்ளது. இதன்படி வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணியின் இன்னிங்சை கில் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் தொடங்கினார்கள்.
ரோகித் சர்மா சமீபத்தில் குறிப்பிடத்தக்க பேட்டிங் சரிவை கண்டு வருகிறார். மேலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெறும் 2 ரன்னில் வெளியேறினார். இந்த நிலையில் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விளையாடிய ரோஹித் சர்மா இந்த போட்டியில் ஆரம்பம் முதலே தனது அதிரடியான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை பவுண்டரி மற்றும் சிக்ஸர்களாக அடித்துக் கொண்டிருக்கும் வேளையில் புதிய சாதனை ஒன்றைப் படைத்திருக்கிறார்.
ரோகித் சர்மா படைத்த 2 சாதனைகள்
அதாவது வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் கிரிக்கெட் வீரரான கிறிஸ் கெயில் இதுவரை 301 போட்டிகளில் விளையாடி 331 சிக்ஸர்கள் அடித்துவிட்டு தனது ஓய்வினை அறிவித்துவிட்டார். அவருக்கு பின்னால் இதுவரை இருந்த ரோஹித் சர்மா தற்போது வரை ஐந்து சிக்சர்கள் அடித்திருக்கும் நிலையில் மொத்தமாக 334 சிக்சர்கள் அடித்து ஒரு நாள் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்களின் பட்டியலில் தற்போது இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.
இதையும் படிங்க:வெறும் 73 வினாடி.. மின்னல் வேகத்தில் ஜடேஜா செய்த செயல்.. ஒரு நாள் தொடரில் யாரும் செய்யாத அரிய நிகழ்வு
இதில் முதல் இடத்தில் 361 போட்டிகளில் விளையாடி 351 சிக்ஸர்களுடன் தனது கிரிக்கெட் வாழ்க்கையை முடித்த பாகிஸ்தான் அணியின் ஜாம்பவான் வீரர் ஷாஹித் அப்ரிடி முதல் இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ரோஹித் சர்மா விரைவாக இவரது சாதனையை முறியடிப்பார் என்றும் எதிர்பார்க்கலாம். அதுமட்டுமல்லாமல் இந்திய முன்னாள் கேப்டன் ராகுல் ராவிட் ஒருநாள் கிரிக்கெட்டில் 10889 ரன்கள் குவித்திருக்கும் நிலையில் அதையும் ரோஹித் சர்மா முறியடித்து தற்போது நான்காவது அதிக ரன் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார்.