இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கட்டாக் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.
இதில் இந்திய அணி வீரர் ரவீந்திர ஜடேஜா மின்னல் வேகத்தில் வெறும் 76 வினாடியில் ஒரு சாதனையை செய்து முடித்திருக்கிறார்.
இந்தியா இங்கிலாந்து 2வது ஒரு நாள்
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது இதில் ஏற்கனவே டி20 தொடரை இங்கிலாந்து அணி இளந்த நிலையில் தற்போது முதல் ஒரு நாள் போட்டியிலும் தோல்வியை சந்தித்துள்ளது. இந்த சூழ்நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது கிரிக்கெட் போட்டி கட்டாக் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து விளையாடியது.
இந்திய அணியில் பேட்டிங் வந்து வீச்சு மற்றும் பீல்டிங் என அனைத்திலும் அசத்தக்கூடிய ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா இந்தப் போட்டியில் 10 ஓவர்கள் வீசி ஒரு ஓவர் மெய்டனுடன் 35 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகள் கைப்பற்றினார். பொதுவாக ஜடேஜா பந்து வீசும் போது மற்ற வீரர்களை காட்டிலும் தனது ஓவரை விரைவாக முடிக்கக் கூடியவர். பந்துவீச்சு ஆக்ஷனில் பெரிய வேரியேஷன்கள் இல்லாமல் நின்ற இடத்தில் இரண்டு அடி எடுத்து வைத்து பந்தை சுழற்றுவதில் வல்லவர்.
மின்னல் வேகத்தில் செயல்பட்ட ஜடேஜா
இந்த நிலையில் தற்போது நடைபெற்று வரும் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது ரவீந்திர ஜடேஜா போட்டியின் 24வது ஓவரை வீசினார். ஹாரி ப்ரூக் எதிர்கொண்ட அந்த ஓவர் ரன்கள் எதுவும் எடுக்கப்படாமல் ஆறு பந்துகளும் டாட் பந்துகளாக முடிந்தது. இதனால் ஜடேஜா தனது ஆறு பந்துகளை வெறும் 73 வினாடிகளுக்குள் வீசி முடித்திருக்கிறார். பொதுவாக ஒரு ஓவரை வீசி முடிக்க இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் வரை ஆகும் நிலையில் ஜடேஜா மின்னல் வேகத்தில் அந்த ஓவரை வீசி முடித்திருக்கிறார்.
இதையும் படிங்க:எனக்கு தெரியும்.. டி20யால் எனக்கு இந்த வாய்ப்பு வரல.. அந்த விஷயம்தான் காரணம் – வருண் சக்கரவர்த்தி பேட்டி
இது தற்போது சமூக வலைதளத்தில் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. மேலும் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 49.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 304 ரன்கள் குவித்திருக்கிறது. தற்போது இலக்கை நோக்கி விளையாடி வரும் இந்திய அணி 13.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 101 ரன்கள் குவித்து விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.