15 வருடம்.. கோட்டை விட்ட தோனி ரோகித்.. கேப்டனாக கோலியிடம் மட்டுமே இருக்கும் பெருமை

0
36
Virat

இன்று இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருக்கிறது. தோனியின் மோசமான ஒரு சாதனையை ரோகித் சர்மா கேப்டனாக சமன் செய்திருக்கிறார்.

நியூசிலாந்து அணிக்கு எதிராக பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற வந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் நியூசிலாந்து அணியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்திருக்கிறது.

- Advertisement -

இரண்டு செஷனில் போட்டியை தோற்ற இந்திய அணி

இந்திய அணி இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த முதல் செஷனில் ஒட்டுமொத்தமாக 10 விக்கெட்டுகளையும் கொடுத்து 46 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. இதற்கடுத்து நேற்று இரண்டாவது செஷனில் மட்டும் 7 விக்கெட்டுகளை கொடுத்தது.

இப்படி இரண்டு செஷனில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய காரணத்தினால் இந்திய அணி தப்பிக்க வேண்டிய ஒரு போட்டியில் கோட்டை விட்டு இருக்கிறது என்று சொல்லலாம். மேலும் கேப்டன் ரோஹித் சர்மா ஆடுகளத்தை தவறாக கணித்துவிட்டது மிக முக்கியமான காரணமாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

விராட் கோலி இடம் இருக்கும் பெருமை

இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 15 வருடங்களில் டாஸ் வென்று நான்கு முறை போட்டியை சொந்த மண்ணில் தோற்று இருக்கிறது. இந்த நான்கு முறையில் கேப்டனாக தோனி இருந்த பொழுது இரண்டு முறையும் தற்பொழுது ரோகித் சர்மா கேப்டனாக இருக்கும் பொழுது இரண்டு முறையும் இந்திய அணி தோற்று இருக்கிறது.

அதே சமயத்தில் விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக இருந்த பொழுது டாஸ் வென்று சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியை கூட தோற்றது கிடையாது. இந்த சிறப்பு பெருமை விராட் கோலி இடம் மட்டுமே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ரோகித் செஞ்ச அந்த தப்ப நானும் செஞ்சி இருப்பேன்.. எங்களுக்கு தைரியம் தந்தது இவர்தான் – டாம் லாதம் பேட்டி

கடந்த 15 வருடங்களில் சொந்த மண்ணில் டாஸ் வென்று இந்திய அணி தோற்ற போட்டிகள் :

வான்கடேவில் இங்கிலாந்து (தோனியின் கீழ்)
ஈடன் கார்டனில் இங்கிலாந்து (தோனியின் கீழ்)
இந்தூரில் ஆஸ்திரேலியா (ரோஹித்தின் கீழ்)
பெங்களூரில் நியூசிலாந்து (ரோஹித்தின் கீழ்)*

- Advertisement -