2வது போட்டியில் தோற்றும்.. ரோஹித் பயிற்சியை ரத்து செய்ய காரணம் இதுதான் – சுப்மான் கில் பேட்டி

0
345

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெற உள்ளது. இதற்காக இரண்டு அணி வீரர்களும் தற்போது தங்களது பயிற்சியை முடித்து இருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா குறித்து சுப்மான் கில் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்தியா ஆஸ்திரேலியா மூன்றாவது டெஸ்ட்

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும் நிலையில் முதல் போட்டியில் இருந்து ரோஹித் சர்மா விலக பும்ரா தலைமையிலான இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது. இந்த சூழ்நிலையில் ரோகித் சர்மா மீண்டும் இரண்டாவது போட்டியில் இந்திய அணியுடன் இணைந்தார். ஆனால் இரண்டாவது போட்டி பேட்டிங்கில் மட்டுமல்லாமல் கேப்டன் பொறுப்பிலும் ரோஹித் சர்மா சொதப்பலான பங்களிப்பினை வெளிப்படுத்த இரண்டாவது போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

மேலும் மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரஸ்பேனில் உள்ள கபா மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது. இதற்கு முன் கடந்த 2021 ஆம் ஆண்டு இந்திய அணி இதே மைதானத்தில் வரலாற்று வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இந்த சூழ்நிலையில் இரண்டாவது போட்டியில் தோற்ற நிலையில் தற்போது நடைபெற்ற பயிற்சி அமர்வில் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பங்கு பெறவில்லை. மேலும் செய்தியாளர் சந்திப்பிலும் ரோகித் சர்மாவிற்கு பதிலாக கில் கலந்து கொண்ட நிலையில் அதற்கான காரணத்தை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

ரோஹித் சர்மா பயிற்சி ரத்து செய்ய காரணம் இதான்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “பயிற்சியில் ரோகித் சர்மா கலந்து கொள்ளாதது குறித்து கேட்கிறீர்கள். ஆனால் இது ஒரு விருப்பமான பயிற்சி அமர்வுதான். மேலும் ரோகித் சர்மா தனக்கு தேவையான பயிற்சியை செய்துவிட்டார் என்று நினைக்கிறேன். அதனால்தான் இதில் அவர் கலந்து கொள்ளவில்லை. கடந்த 2021ம் ஆண்டு இதே மைதானத்தில் நாங்கள் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றோம்.

இதையும் படிங்க:நான் எதிர் டீம்தான்.. ஆனா ஆர்சிபி செஞ்சத இந்த கண்ணோட்டத்துல பார்த்தா.. நம்பவே முடியல – புவனேஸ்வர் குமார் பேட்டி

அந்தத் தருணம் மிக ஏக்கமாக இருக்கும் நிலையில் மீண்டும் அதே நம்பிக்கையோடு விளையாடுவேன் என்று உணர்கிறேன். இந்த போட்டியில் நாங்கள் பெரிய ரன்கள் குவிக்க முடிவு செய்து இருக்கிறோம். சிவப்பு பந்தில் பகல் டெஸ்ட் போட்டியில் அதிகமாக விளையாடி பழகி விட்டோம். நான் கடந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் நன்றாக பேட்டிங் செய்தேன் என்று உணர்கிறேன். மறுமுனையில் நடந்த விஷயங்கள் பாதிப்படைய வைத்தது” என்று கூறி இருக்கிறார். எனவே கடந்த முறை இதே மைதானத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது போல இந்த முறையும் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி வெற்றி வரலாறு படைக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

- Advertisement -