16 வருடத்தில் முதல் கேப்டன்.. தோனி கோலி செய்யாத மோசமான சாதனையை செய்த ரோகித்.. இந்திய கிரிக்கெட்

0
276
Virat kohli and Rohit sharma

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையே முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி தற்போது வலுவான நிலையில் இருக்கிறது.

இந்தியா வலுவான நிலையில் இருந்தாலும் அணியின் கேப்டன் ரோகித் சர்மா இந்திய முன்னாள் கேப்டன்களான விராட் கோலி மற்றும் விராட் கோலி செய்யாத ஒரு மோசமான சாதனையை படைத்திருக்கிறார்.

- Advertisement -

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் விளையாடி வரும் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 376 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இதில் அதிகபட்சமாக இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 113 ரன்கள் குவித்தார். அவருக்கு பக்கபலமாக ரவீந்திர ஜடேஜா 86 ரன்கள் குவித்தார்.

அதற்குப் பிறகு தனது முதல் இன்னிங்ஸ் களம் இறங்கிய வங்கதேச அணி இந்திய அணி வீரர்களின் சிறந்த பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 47 ஓவர்களிலேயே 149 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா 11ஓவர்கள் பந்துவீசி ஒரு ஓவர் மெய்டனுடன் 50 ரன்கள் விட்டுக் கொடுத்து நான்கு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். சிராஜ், ஆகாஷ் டீப் மற்றும் ரவிந்திர ஜடேஜா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள்.

- Advertisement -

அதற்குப் பிறகு தற்போது இந்திய அணி களமிறங்கி விளையாடி வரும் நிலையில் மூன்று விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் குவித்திருந்த நிலையில் இரண்டாவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இதில் முதல் இன்னிங்ஸில் ஆறு ரன்கள் குவித்த ரோஹித் சர்மா இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் ஐந்து ரன்களில் வெளியேறினார். இரண்டு இன்னிங்ஸ்களில் சேர்த்து ஒற்றை இலக்கத்திலேயே இந்த டெஸ்ட் போட்டியில் வெளியேறி இருக்கிறார்.

இதன் மூலமாக கடந்த 16 ஆண்டுகளில் சொந்த மைதானத்தில் ஒரு டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறிய இந்திய கேப்டன் என்ற மோசமான சாதனையை ரோகித் சர்மா படைத்திருக்கிறார். ரோஹித் சர்மாவுக்கு முன்னதாக விராட் கோலி மற்றும் மகேந்திர சிங் தோனி ஆகியோர் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்ட போதிலும் இத்தகைய சாதனையை படைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:விராட் ரோஹித் பழகுன ஆளுங்கதான்.. அதனால எங்க கவனம் இவங்க 2 பேரு மேலதான் இருக்கு – ஹேசில்வுட் பேட்டி

அவரது சாதனை மோசமாக அமைந்தாலும் தற்போது இந்திய அணி வலுவாக உள்ளது. இன்னும் மூன்று நாட்கள் ஆட்டம் மீதம் இருக்கும் நிலையில் இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெறுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டதாகவே தெரிகிறது.

- Advertisement -