விராட் ரோஹித் பழகுன ஆளுங்கதான்.. அதனால எங்க கவனம் இவங்க 2 பேரு மேலதான் இருக்கு – ஹேசில்வுட் பேட்டி

0
108
Team india and Josh hazlewood

இந்திய கிரிக்கெட் அணி தற்போது சொந்த மண்ணில் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதற்கு அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடர் முடித்துவிட்டு ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.

அங்கு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ள நிலையில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரரான ஜோஸ் ஹேசில்வுட் இந்திய டெஸ்ட் அணியில் விளையாடும் வீரர்கள் குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ள நிலையில் தற்போது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இதற்குப் பின்னர் வருகிற நவம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவஸ்கர் டிராஃபியில் விளையாட உள்ளது. இந்திய அணிக்கு எதிராக பல திட்டங்களை ஆஸ்திரேலியா அணி தீட்டி இந்த முறை கட்டாயம் வென்று தீர வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறது.

ஆஸ்திரேலியாவில் விளையாடி பழக்கப்பட்ட விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற வீரர்களைக்காட்டிலும் சில புதிய வீரர்கள் ஆஸ்திரேலியா தொடர்களில் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்து விடுகின்றனர். எனவே அதை முதலில் தடுக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான ஜோஸ் ஹேசில்வுட் இது குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “ஜெய்ஸ்வால் மற்றும் கில் போன்ற வீரர்களுக்கு எதிராக, நாங்கள் அதிக டெஸ்ட் விளையாடாத புதிய வீரர்கள் மீது கவனம் செலுத்த இந்த உத்திகள் பயன்படுத்தப்படும். நாங்கள் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா போன்ற வீரர்களுக்கு எதிராக நாங்கள் பல ஆண்டு காலமாக விளையாடி வருகிறோம். அதனால் அவர்களுக்கு எதிராக என்ன திட்டங்கள் செய்ய வேண்டும் என்று எங்களுக்கு தெரியும்.

இது அடிப்படைகளை சார்ந்தது. எனவே அவர்களுக்கு எதிராக நன்றாகவும் நீண்ட காலமாகவும் இந்த அடிப்படைகளை பின்பற்றி வருகிறோம்” என்று கூறி இருக்கிறார். கடைசியாக இந்திய அணி சுற்றுப்பயணம் செய்த ஆஸ்திரேலியாவில் இரண்டு முறையும் வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளது.

இதையும் படிங்க:202 ரன் 6 விக்கெட்.. நியூசிலாந்துக்கு எதிராக சவால்விடும் இலங்கை அணி.. இந்தியாவுக்கு WTC பைனல் வாய்ப்பில் நல்லது நடக்குமா?

எனவே இதற்கு முன்னர் செய்த தவறுகளை சரி செய்து கொண்டு இந்த முறை வெற்றி பெற வேண்டும் என்கிற தீவிரத்தில் ஆஸ்திரேலியா உள்ளது. ஆனால் இந்திய அணியும் மூன்றாவது முறையாக ஆஸ்திரேலியாவில் கோப்பையை கைப்பற்ற கௌதம் கம்பீர் தலைமையிலான புதிய இந்திய அணி புதிய பாய்ச்சலுக்கு தயாராகும் என்பது எந்த வித சந்தேகமும் இல்லை.

- Advertisement -