வீடியோ: பக்காவாக ஆள் நிறுத்தி ரோகித் சர்மா விக்கெட்டை தூக்கிய முன்னாள் மும்பை வீரர் ரிஷி தவான்!

0
984

ரோகித் சர்மா எங்கே அடிப்பார் என்று தெரிந்து கொண்டு அதற்கேற்றவாறு ஆள் நிறுத்தி அவரது விக்கெட்டை தூக்கியுள்ளார் ரிஷி தவான். ரோகித் சர்மா ஆட்டமிழந்த வீடியோவை கீழே பார்க்கலாம்.

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் போட்டி மொகாலில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர் பிரப்சிம்ரன் தட்டுதடுமாறி ஏழு பந்துகளுக்கு ஒன்பது ரன்கள் அடித்து அர்ஷத் கான் பந்தில் ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

தவான் ஐந்து பவுண்டரிகள் உட்பட 20 பந்துகளில் 30 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். 26 பந்துகளுக்கு 27 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார் மேத்யூ ஷாட்.

11.2 ஓவர்களில் 95 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை பஞ்சாப் கிங்ஸ் அணி இழந்திருந்த போது, லிவிங்ஸ்டன் மற்றும் ஜித்தேஷ் சர்மா இருவரும் ஜோடி சேர்ந்து மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்ய துவங்கினர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது ஃபார்மிற்கு வந்த லிவிங்ஸ்டன் இப்போட்டியில் 42 பந்துகளில் நான்கு சிக்ஸர் மற்றும் ஏழு பவுண்டரிகள் உட்பட 82 ரன்கள் விளாசி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்.

- Advertisement -

இவருக்கு பக்கபலமாக இருந்த ஜித்தேஷ் சர்மா தனது பார்மை இந்த போட்டியிலும் தொடர்ந்தார். இவர் இரண்டு சிக்ஸர்கள் 5 பவுண்டரிகள் உட்பட 27 பந்துகளில் 49 ரன்கள் விளாசினார். இந்த ஜோடி கடைசி 53 பந்துகளில் 119 ரன்களை நான்காவது விக்கெட்டிற்கு குவித்தது.

10 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 72 ரன்கள் அடித்திருந்த பஞ்சாப் கிங்ஸ் அணி கடைசி பத்து ஓவர்களில் 143 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

215 ரன்கள் என்னும் இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக முதல் ஓவரை வீசினார் முன்னாள் மும்பை இந்தியன்ஸ் வீரர் ரிஷி தவான். முதல் இரண்டு பந்துகளை தட்டுத்தடுமாறி எதிர்கொண்ட ரோகித் சர்மா மூன்றாவது பந்தை பாயிண்ட் திசையில் துடிக்கி அடிக்க முயற்சித்து மேத்யூ ஷாட் வசம் பிடிபட்டு ஆட்டம் இழந்தார். மூன்று பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் ரோகித் சர்மா வெளியேறியதால் மும்பை இந்தியன்ஸ் அணி சற்று தடுமாற்றம் கண்டு வருகிறது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா 15வது முறையாக டக் அவுட் ஆகிறார். அதிக முறை டக் அவுட் ஆன வீரருடன் சமன் செய்து முதலிடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.