டி20 வரலாற்றில் முதல் முறை.. ஸ்பெஷல் 100.. ரோகித் 0 ரன்னில் அவுட் ஆகியும் இமாலய சாதனை

0
1970

இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 0 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினாலும் ஒரு மகத்தான சாதனையைப் படைத்துள்ளார்.

மொகாலியில் நடைபெற்ற இப்போட்டியில் டாசை இழந்த ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் குவித்தது. அந்த அணியின் முகமது நபி அதிகபட்சமாக 42 ரன்கள் விளாசினார். இந்தியா அணிதரப்பில் முகேஷ் குமார் மற்றும் அக்ஷர் பட்டேல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

இதனால் 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் ரோஹித் சர்மா 0 ரன்னில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். மற்ற பேட்ஸ்மேன்கள் தங்கள் பங்குக்கு ரன்கள் அடித்திருந்தாலும் இந்திய அணியின் சிவம் துபே அதிரடியாக விளையாடி 60 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். அவர் பந்து வீச்சிலும் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.

ஆல் ரவுண்டராக ஜொலித்த சிவம் துபே ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தான அணி அடுத்த போட்டியில் வெற்றி பெறப் போராடும் என்பதில் சந்தேகம் இல்லை. இது ஒரு புறம் இருக்க இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 50 ஓவர் உலகக் கோப்பைக்கு பிறகு பங்கேற்கும் முதல் டி20 தொடர் இதுவாகும்.

- Advertisement -

எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களமிறங்கிய ரோகித் சர்மா எதிர்பாராத விதமாக ரன் கடக்கைத் தொடங்காமலேயே ரன் அவுட் ஆகி வெளியேறினார். இருப்பினும் டி20 கிரிக்கெட்டில் 100 வெற்றிகளை பதிவு செய்த முதல் ஆண் கிரிக்கெட்டர் என்ற வரலாற்றினை எழுதியுள்ளார். டி20 வெற்றிகளின் அடிப்படையில் ஆஸ்திரேலியா அணியின் அலிசா ஹிலி மற்றும் எல்லீஸ் பெரி ஆகியோர் 100 வெற்றிகளை பெற்ற வீராங்கனைகள் ஆகும்.

இதில் இங்கிலாந்தை சேர்ந்த டேனி வியாாட் 111 டி20 போட்டிகளில் வெற்றி பெற்று முதல் இடத்தில் உள்ளார். இதில் தற்போது ரோகித் சர்மா 4வது வீரராக இணைந்துள்ளார். அதிக டி20 போட்டிகளில் வெற்றி பெற்றவர்களில் ஆண்கள் வரிசையில் ரோஹித் சர்மாவிற்கு அடுத்து ஷோயப் மாலிக் 86 போட்டிகளிலும், விராட் கோலி 73 போட்டிகளிலும், முகமது ஹபீஸ் மற்றும் முகமது நபி ஆகியோர் தலா 70 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

- Advertisement -