பவுலர் மெக்ராத் சாதனையை உடைத்த ரோகித் சர்மா.. உலக கோப்பையில் எதையும் மிச்சம் வைக்காமல் அதிரடி!

0
4030
Rohit

நடப்பு 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தொடர்ச்சியாக ஆறாவது வெற்றி பெற்று முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்று இருக்கிறது.

இன்று உத்தரப்பிரதேசம் லக்னோ மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து229 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

இன்று விளையாடிய ஆடுகளம் இரட்டை வேகம் கொண்டதாக இருந்தது. மேலும் பந்துகள் அதிக அளவில் மெதுவாக வந்தன. இதனால் பேட்ஸ்மேன்கள் டைம் செய்வதற்கு மிகவும் சிரமப்பட்டார்கள்.

இதன் காரணமாக இந்திய பேட்ஸ்மேன்களில் முன்னணி பேட்ஸ்மேன்கள் எதிர்பார்த்த அளவிற்கு விளையாடவில்லை. பவர் பிளேவில் இந்திய அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியில் சிக்கியது.

இந்த போட்டியில் முதலில் அதிரடியாக ஆரம்பித்த ரோகித் சர்மா பின்பு சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாறிக்கொண்டு பொறுமையாக விளையாடி 101 பந்துகளில் 87 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

அவருடைய இந்த ஆட்டம்தான் இந்திய அணி 229 ரன்கள் எடுப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதற்கு அடுத்து பந்துவீச்சுக்கு வந்த இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு 129 ரன்களுக்கு இங்கிலாந்தை சுருட்டி, நூறு ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வெற்றி பெற வைத்தது.

இந்த போட்டியில் ஆட்டநாயகனாக கேப்டன் ரோஹித் சர்மா தேர்வு செய்யப்பட்டார். நடப்பு உலகக்கோப்பை தொடரில் அவருக்கு இது இரண்டாவது ஆட்டநாயகன் விருது என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சதம் அடித்த பொழுது ஆட்டநாயகன் விருது வென்று இருந்தார்.

இந்த வகையில் உலகக் கோப்பை தொடரில் அதிக ஆட்டநாயகன் விருது வென்ற பட்டியலில் ரோகித் சர்மா இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறார். இந்த வரிசையில் சச்சின் டெண்டுல்கர் முதல் இடத்தில் இருக்கிறார்.

9- சச்சின் டெண்டுல்கர்
7- ரோகித் சர்மா
6- கிளன் மெக்ராத்
5- ஏபி டிவில்லியர்ஸ்
5- சனத் ஜெயசூர்யா
5- கிரகாம் கூச்
5- லான்ஸ் க்ளூஸ்னர்
5- விஐவி ரிச்சர்ட்ஸ்
5- டேவிட் வார்னர்