விஜய் ஹசாரே 2025.. ரோகித்துக்கு முதல் பந்தில் நடந்த சோகம்.. விராட் அதிரடியில் மிரட்டல்.. வித்தியாசமான இரண்டு சம்பவங்கள்

0
165
Rohit

இன்று விஜய் ஹசாரே ஒருநாள் தொடரின் இரண்டாம் கட்ட போட்டிகளில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு வித்தியாசமான சம்பவங்கள் நடைபெற்றிருக்கிறது.

இந்தத் தொடரில் நடைபெற்ற முதல் போட்டியில் மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் அதிரடி சதங்கள் அடித்த அணியை வெற்றி பெற வைத்து ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தி இருந்தார்கள்.

- Advertisement -

ரோகித் சர்மாவுக்கு நடந்த சோகம்

இன்று இரண்டாவது போட்டியில் அனைத்து அணிகளும் விளையாடி வருகின்றன. இதில் மும்பை உத்தரகாண்ட் அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற உத்தரகாண்ட் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதைத்தொடர்ந்து பேட்டிங் செய்ய வந்த மும்பை அணிக்கு முதல் பந்தை ரோகித் சர்மா சந்தித்தார். நாகர்கோவில் வீசிய அந்தப் பந்தை ரோகித் சர்மா ஃபுல் ஷாட் அடிக்க அது கேட்ச் ஆக மாறியது. இதனால் ரோகித் சர்மா முதல் பந்தில் ஆட்டம் இழந்து கோல்டன் டக் ஆனார்.

- Advertisement -

விராட் கோலி மிரட்டல்

இன்னொரு பக்கத்தில் டெல்லி மற்றும் குஜராத் அணிகள் மோதிய போட்டி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. டெல்லி அணிக்கு முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்கள். இதனால அந்த அணிக்கு அழுத்தம் உண்டானது.

இதையும் படிங்க : அவர் ஒரு மேட்ச் வின்னர்.. எப்படி டி20WCல தேர்வு செய்யாம போனாங்க.. என்னால நம்பவே முடியல – முன்னாள் தேர்வாளர் ஆதங்கம்

அதே சமயத்தில் இன்னொரு முனையில் நின்ற விராட் கோலி அதிரடியில் மிரட்டினார். அவர் வெறும் 29 பந்துகளை மட்டும் சந்தித்து தனது அரை சதத்தை அடித்தார். சற்று முன் விராட் கோலி 61 பந்துகளை சந்தித்து 13 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 77 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து இருக்கிறார்.

- Advertisement -