அடுத்த மாதம் இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலக கோப்பை நடைபெற உள்ள நிலையில் அதற்கான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்பாக அறிவிக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில் முன்னாள் இந்திய தேர்வாளர் திலீப் வெங்சர்க்கார் டி20 உலக கோப்பைக்கு ஒரு மேட்ச் வின்னர் இந்திய வீரர் தேர்வு செய்யப்படாதது குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் வாரியம் கடந்த சில தினங்களுக்கு முன்பாக 15 பேர் கொண்ட இந்திய அணியை டி20 உலக கோப்பை தொடருக்கு வெளியிட்டது. இதில் இந்திய அணியின் துணை கேப்டனாக செயல்பட்ட சுப்மான் கில் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அக்ஷார் பட்டேல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார். மேலும் அவரது இடத்திற்கு இசான் கிஷான் பேக்கப் பிளேயராக சேர்க்கப்பட்டிருக்கிறார்.
இதன் மூலமாக சஞ்சு சாம்சன் உலகக்கோப்பை தொடரில் துவக்க ஆட்டக்காரராக களம் இறங்குவார் என்று தெரிகிறது. இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் தேர்வாளராக இருந்த திலீப் வெங்கர்சர்கார் டெஸ்ட் கிரிக்கெட்டில் துவக்க ஆட்டத்தில் கலக்கி வரும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்தத் தொடரில் இடம்பெறாதது தனக்கு மிகுந்த ஏமாற்றத்தை கொடுப்பதாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும் போது “இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் அனைவருமே மிகச் சிறந்த வீரர்கள். ஆனால் தற்போதைய ஃபார்ம் மற்றும் உடல் தகுதியின் அடிப்படையில் வீரர்களை மதிப்பிடும் நிலையில் நான் இருக்கிறேன். தற்போதைய பார்ம் என்பது தேர்வு குழுவில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. கில்லை விட நான் யாரை தேர்வு செய்திருப்பேன் என்று நீங்கள் கேட்டால் எனது தேர்வு ஜெய்ஸ்வால்தான்.
இதையும் படிங்க:என்னைப் பொறுத்தவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் கணிக்க முடியாதவர் இந்த இந்திய வீரர்தான் – ஆஸி ஸ்காட் போலண்ட் கணிப்பு
அவர் எவ்வளவு சிறந்த வீரர் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்திருக்கிறார். அணிக்குத் தேவையான தொடக்கங்களை இப்போதெல்லாம் ஒரு சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறார். அவர் எந்த தவறும் செய்யாமல் மீண்டும் மீண்டும் அணியில் இருந்து வெளியேற்றுவது துரதிஷ்டவசமானது. அவர் அனைத்து வகையான ஆட்டங்களிலும் சிறந்த நிலையில் இருக்கிறார். இதைவிட அவர் வேறு என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை. அணியின் ஒரு மேட்ச் வின்னர் வீரரை யாரும் விட்டு விடக்கூடாது” என்று அவர் பேசி இருக்கிறார்.






