செஞ்சுரி அடிக்கிறதுல கில்லிடா…! சாதனை படைத்த முதல் இந்திய கேப்டன் ரோகித் சர்மா!

0
344

மூன்றுவித போட்டிகளிலும் சதமடித்த முதல் இந்திய கேப்டன் என்கிற சாதனையை படைத்திருகிறார் கேப்டன் ரோகித் சர்மா.

நாக்பூர் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 177 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தனது முதல் இன்னிங்சில் இறங்கிய இந்திய அணி முதல் நாளில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் அடித்திருந்தது.

- Advertisement -

இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை துவங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின் அறிமுக வீரர் டாட் மர்பி பந்தில் 23 ரன்களுக்கும் புஜாரா 7 ரன்களுக்கும் டாட் மர்பி பந்தில் அவுட்டாகினர்.

உணவு இடைவேளை முடிந்து வந்த முதல் பந்திலேயே விராட் கோலி 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுமுனையில் நிலைத்து ஆடிவந்த கேப்டன் ரோகித் சர்மா கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு பின் டெஸ்டில் சதம் அடித்தார்.

இந்த சதத்தின் மூலம் சாதனையும் படைத்திருகிறார். அதாவது, கேப்டனாக டெஸ்டில் முதல் சதம் அடிக்கிறார். மூன்று வித போட்டிகளிலும் சதமடித்த முதல் இந்திய கேப்டன் என்கிற சாதனையை படைத்துள்ளார். ஒட்டுமொத்தமாக 5வது கேப்டன் ஆவார்.

- Advertisement -