ரோகித் கேஎல்.ராகுல் சாதனை காலி.. பவர் பிளேவில் ஜெய்ஸ்வால் மெகா ரெக்கார்ட்.. மிரட்டல் அடி!

0
3198
Jaiswal

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடர் இந்தியாவின் முடிந்த பிறகு, தற்பொழுது உள்நாட்டில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

இந்த தொடரில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் இன்று திருவனந்தபுரம் கிரீன்பீல்ட் மைதானத்தில் தொடரின் இரண்டாவது போட்டி தற்பொழுது நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் தோல்வி அடைந்ததால் ஆடம் ஜாம்பா மற்றும் இருவரையும் இந்த போட்டியில் ஆஸ்திரேலியா களம் இறக்கி இருக்கிறது.

இன்றைய போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவது என முடிவு செய்தது. ஆட்டத்தின் இரண்டாவது பகுதியில் பனிப்பொழிவு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆடுகளமும் மெதுவானது.

இந்த நிலையில் இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் இருவரும் களத்திற்கு வந்தார்கள். இந்த போட்டியில் கிடைக்கும் துவக்கத்தை விட்டு விடக்கூடாது அதே சமயத்தில் தைரியமாக அடிக்க வேண்டும் என்பதில் ஜெய்ஸ்வால் உறுதியாக இருந்தார்.

- Advertisement -

ஆஸ்திரேலிய வீரர் சீன் அப்பாட் வீசிய மூன்றாவது ஓவரில் முதல் மூன்று பந்துகளில் பவுண்டரிகளையும், அடுத்த இரண்டு பந்தில் இரண்டு சிக்ஸர்களையும் நொறுக்கி, அதிரடியாக 24 ரன்கள் எடுத்தார்.

இதற்கு அடுத்து நாதன் எல்லீஸ் பந்துவீச்சுக்கு வர, அவருடைய ஓவரில் தொடர்ந்து மூன்று பவுண்டரிகள் அடித்து, பவர் பிளே முடிவதற்குள் 5.4 ஓவரில் 24 பந்தில், அதிரடியாக 9 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர் உடன் அரைசதம் அடித்து மிரட்டினார்.

அதே ஓவரில் அடுத்த பந்தில் ஆட்டம் இழந்தார். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக பவர்பிளேவில் அதிக ரன் எடுத்த வீரர் என்ற மெகா சாதனையை படைத்திருக்கிறார்.

ஜெய்ஸ்வால் 53 ஆஸ்திரேலியா 2023
ரோகித் சர்மா 50 நியூசிலாந்து 2020
கேஎல்.ராகுல் 50 ஸ்காட்லாந்து 2022
ஷிகர் தவான் 48 இலங்கை 2016
ரோஹித் சர்மா 46 பங்களாதேஷ் 2019