“ரோகித் நீங்க மாறவேண்டிய நேரம்.. இல்லனா கஷ்டப்படுவிங்க” – சுனில் கவாஸ்கர்

0
455
Rohit

இன்று கிறிஸ்துமஸ் முடிந்து நாளை பாக்ஸிங் டே நாளில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அந்த நாட்டில் இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் விளையாடுகிறது.

உலகக் கோப்பை இறுதிப்போட்டி தோல்விக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் விளையாட இருக்கிறார்கள். அவர்கள் அதிலிருந்து வெளிவந்து எப்படி செயல்படுகிறார்கள் என்பதை பார்க்க ரசிகர்கள் பெரும் ஆவலாக இருக்கிறார்கள்.

- Advertisement -

மேலும் தென் ஆப்பிரிக்கா மண்ணில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகள் எப்பொழுதும் சிறப்பானவை. நல்ல வேகமும் பவுன்ஸ் கொண்ட ஆடுகளங்களில் போட்டி நடைபெறுகின்ற காரணத்தினால், கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமையும்.

இன்னொரு பக்கம் இந்திய அணிக்கு தென் ஆப்பிரிக்காவில் மோசமான டெஸ்ட் வரலாறு ஒன்று இருந்து வருகிறது. அங்கு டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்பதை மாற்ற வேண்டிய கட்டாயம் ரோகித் சர்மா அணிக்கு இருக்கிறது.

இந்த நிலையில் ரோகித் சர்மா குறித்து பேசி உள்ள கவாஸ்கர் கூறும்பொழுது “அவர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தாக்குதல் பாணியில் விளையாடுகிறார். முதல் 10 ஓவர்களில் பவர் பிளேவில் எந்த அளவிற்கு ரன் அடிக்க முடியுமோ அதைச் செய்வதற்கு அவர் முடிவு செய்திருந்தார். இதை நாம் உலகக்கோப்பையில் பார்த்தோம். உலகக் கோப்பையில் அவருடைய அணுகுமுறை இதுவாக இருந்தது.

- Advertisement -

ஆனால் தற்பொழுது நடைபெறுவது டெஸ்ட் கிரிக்கெட். எனவே அவர் தனது அணுகுமுறையை முழுவதுமாக மாற்றிக் கொள்ள வேண்டும். அவர் நிலைத்து நின்று நாள் முழுவதும் விளையாடுவது குறித்து சிந்திக்க வேண்டும். அவரிடம் இருக்கும் ஷாட்களை வைத்து நாள் முழுவதும் அவர் விளையாடினால், அவர் ஒரு 150 ரன்கள் எடுக்கும் பொழுது, இந்திய அணி 300 இல்லை 350 ரன்கள் நாள் முடிவில் எடுத்திருக்கும்.

ஒரு பேட்ஸ்மேனாக அவர் செய்ய வேண்டிய மாற்றம் இதுதான். கேப்டனாகவும் பேட்ஸ்மேன் ஆகவும் இருக்கக்கூடிய ஒருவர், பேட்டிங்கில் சிறப்பாக செயல்படும் பொழுது அது தன்னம்பிக்கையை அதிகரிக்கும். இது ரோகித் சர்மாவுக்கு ஒரு பெரிய சவாலாகவே இருக்கும்!” என்று கூறியிருக்கிறார்!