“ரோகித் 2 முக்கியமான விஷயம் செஞ்சிருக்கார்.. உலக கோப்பையை இதனாலதான் ஜெயிப்போம்!” – ஆச்சரியப்படுத்திய கம்பீர்!

0
2358
Rohit

இந்திய அணி தற்பொழுது ரோகித் சர்மா கேப்டன்ஷியில் மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. அணி வீரர்களிடையே காணப்படும் நட்பின் ஒற்றுமையும் களத்தில் வெற்றிகளாக எதிரொலிக்கிறது.

இந்திய அணிக்குள் தற்பொழுது ஒருவர் மற்றவரின் வெற்றிக்காக வேலை செய்கிறார்கள். மேலும் ஒருவர் வெற்றி குறித்து சக வீரர்கள் மகிழ்ச்சி கொள்கிறார்கள். எல்லாவற்றையுமே அணியின் வெற்றிக்காகவே செய்கிறார்கள்.

- Advertisement -

அணியின் எல்லா வீரர்களுடைய மனநிலையும் இவ்வளவு நட்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கின்ற காரணத்தினால், அவர்களின் செயல்முறை காலத்தில் மிகவும் தைரியமாகவும் நம்பிக்கையாகவும் வெளிப்படுகிறது.

இதை இந்த உலகக் கோப்பையில் இந்திய அணி விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் பார்க்க முடிந்தது. ரோகித் சர்மா கேப்டனாக அணியை வழிநடத்தும் முறையில் வீரர்கள் மிகவும்இயல்பாக இருந்து வருகிறார்கள்.

மிகக் குறிப்பாக அணியில் ஒவ்வொருவருக்குமான இடம் குறித்து தெளிவு கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் அவர்களின் இடம் பாதுகாப்பானதாகவும் மாற்றப்பட்டு இருக்கிறது. இதனால் வீரர்கள் குழப்பமும், அச்சமற்ற மனநிலையில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

- Advertisement -

இதுகுறித்து பேசி உள்ள கம்பீர் கூறும் பொழுது ” ஒரு நல்ல தலைவரும் கேப்டனும் உங்களுக்கு பாதுகாப்பை வழங்குகிறார்கள். இது டிரெஸ்ஸிங் ரூமை தனக்கு மட்டும் பாதுகாப்பானதாக அல்லாமல் அனைவருக்கும் பாதுகாப்பானதாக மாற்றுகிறது. ரோகித் சர்மா கேப்டனாக இதைச் செய்திருக்கிறார்.

இதனால்தான் அவர் ஐந்து ஐபிஎல் கோப்பைகளை வென்றிருக்கிறார். இதன் காரணமாகத்தான் அவர் சர்வதேச போட்டிகளில் வெற்றி விகிதமும் அவர் கோப்பைகளை வென்றுள்ள முறையும் மிகச் சிறப்பாக இருக்கிறது. முக்கியமாக டிரெஸ்ஸிங் ரூமை அவர் மிகவும் பாதுகாப்பான ஒன்றாக மாற்றி அமைத்திருக்கிறார்.

ரோகித் பின்னால் இருக்கும் செயல்முறை சிந்தனை என்னவென்றால், அவர் அணியை விரைவான தொடக்கத்திற்கு கொண்டு வர விரும்புகிறார். நீங்கள் பார்க்கிறீர்கள் போட்டி தொடங்கி கொஞ்ச நேரத்தில் விக்கெட் மெதுவாக மாறுகிறது. எனவே எதிரணி மீது அழுத்தம் கொடுக்க பவர் பிளேவில் அதிரடியாக விளையாடுவது அவசியமாகிறது.

எனவே ரோகித் சர்மா அதிரடியாக தங்கள் பந்துவீச்சில் ஆடப் போகிறார் என்று தெரிந்து, பந்துவீச்சாளர்களின் மன நிலையை ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே ரோஹித் சர்மா மாற்றி விடுவதாக நான் நினைக்கிறேன்!” என்று இந்திய அணியின் வெற்றிக்கு இந்த இரண்டு காரணங்களை முன் வைத்திருக்கிறார்!