கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

“ரோகித் டீம்ல ஒரு பெரிய சாதனை பண்ணி இருக்காரு.. இப்படிப்பட்ட ஆள்தான் அவரு!” – ஜாகிர் கான் வெளியிட்ட முக்கிய தகவல்!

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் லீக் சுற்றில் இந்திய அணி விளையாடிய எட்டு போட்டிகளையும் வென்று தற்பொழுது புள்ளி பட்டியலில் நிரந்தரமாக முதலிடத்தை பிடித்திருக்கிறது.

- Advertisement -

உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணி தனது கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தோல்வி அடைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உலகக் கோப்பைக்கு இந்திய அணிக்கு ஒதுக்கப்பட்ட இரண்டு பயிற்சி ஆட்டங்களும் மழையின் காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் தடைப்பட்டது. இதனால் மற்ற அணிகளை விட இந்திய அணி நீண்ட நாட்கள் விளையாடாமல் இருந்து உலகக் கோப்பை தொடருக்கு வந்தது.

ஆனால் இந்திய அணியின் செயல்பாடு யாரும் எதிர்பார்க்காத வகையில் மிக உச்சத்தில் இருக்கிறது. குறிப்பாக இந்திய அணியின் பந்துவீச்சு யூனிட் நம்ப முடியாத வகையில் அற்புதமாக செயல்படுகிறது.

- Advertisement -

இன்னொரு பக்கம் இந்திய அணியின் பேட்டிங் யூனிட் எல்லா மாதிரியும் விளையாடுகிறது. அவர்கள் சூழ்நிலைக்கு தகுந்தவாறு உடனுக்குடன் மாறி சரியான ரன்களை கொண்டு வந்து விடுகிறார்கள். எப்பொழுதும் பீல்டிங் கொஞ்சம் மட்டமாக இருக்கும் ஆனால் இப்பொழுது அந்தத் துறையும் சிறப்பாக இருக்கிறது.

ரோகித் சர்மா கேப்டன்சி குறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜாகீர் கான் கூறும் பொழுது “ரோகித் திரைக்குப் பின்னால் வேலை செய்ய விரும்பும் வீரர். எனவே நீங்கள் ஆடுகளத்தில் பார்ப்பது முன்கூட்டியே செய்யப்பட்ட தயாரிப்பைதான். அவர் எல்லா வீரர்களுடன் நேரத்தை செலவிடவும் மேலும் பயிற்சியாளர்கள் மற்றும் அணி ஊழியர்கள் உடன் கலந்து பேசவும் எப்பொழுதும் விரும்புவார். அவர் ஒரு ஆட்டத்தை எப்படி அணுகுகிறார் என்பது தனிச்சிறப்பானது.

அவரைப் பற்றி நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் அவர் அழுத்தத்தின் கீழ் அமைதியாக இருக்கிறார். அவர் சில நேரங்களில் அனிமேட்டாக இருக்கலாம் ஆனால் அவர் அழுத்தத்தை உணர்ந்தார் என்று சொல்ல முடியாது. முடிவுகளை எடுக்கும் பொழுது அவர் தனது உள்ளுணர்வின்படி எடுக்க மிகவும் அமைதியாகத்தான் இருக்கிறார்.

அவர் கோப்பைகளை வென்று வருகிறார். அவருக்கு இது இயல்பான ஒன்று. அணியைப் பற்றி சிந்திக்க போட்டிகளை வெல்ல அவருக்கு தெரியும். அதை சாதிக்க நீங்கள் அனைவரையும் மாற்ற வேண்டும். அவர் ஒரு அற்புதமான சாதனையை செய்திருக்கிறார். எப்படியான அணுகு முறையை கொள்ள வேண்டும் என்று அவர் தெளிவாக வகுத்திருப்பதுதான் அது!” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -
Published by

Recent Posts