ஐபிஎல் 2025

ராஜஸ்தான் அணி இந்த விஷயத்தில் பிடிவாதமா இருப்பாங்க.. அதனால்தான் சாம்சன் அணியை விட்டு போறாரு – முன்னாள் சிஎஸ்கே வீரர்

இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 14 போட்டிகளில் நான்கு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று பத்து தோல்விகளுடன் புள்ளிகள் பட்டியலில் ஒன்பதாவது இடத்தை முடித்தது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவது குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரரான ராபின் உத்தப்பா சில முக்கியமான விஷயங்கள் பேசி இருக்கிறார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சில முக்கியமான வீரர்களை இழந்த ராஜஸ்தான் அணி இளம் வீரர்களுடன் இந்த ஐபிஎல் தொடரை விளையாட ஆரம்பித்தது. மேலும் ஒரு பெரிய பின்னடைவாக அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கட்டை விரல் காயம் காரணமாக பெரும்பாலான போட்டிகளில் இருந்து வெளியேற, அவருக்கு பதிலாக ரியான் பராக் அணியை வழி நடத்தினார். மேலும் அவருக்கு பதிலாக 14 வயது வைபவ் சூரியவன்சி தொடக்க வீரராக களம் கண்டார்.

அவரது சிறப்பான ஆட்டம் அடுத்தடுத்த போட்டிகளில் அவரை தொடக்க வீரராக நிலைபெற வைத்தது. மேலும் அதற்குப் பின்னர் காயம் குணமடைந்து வந்த சாம்சன் மூன்றாவது இடத்தில் களமிறங்க அவரால் பெரிய அளவு விளையாட முடியவில்லை. இதனால்தான் சாம்சன் ராஜஸ்தான் வழியை விட்டு வெளியேற விரும்புகிறார் என ராபின் உத்தப்பா சில முக்கிய குறிப்புகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் போது “தற்போதைய ராஜஸ்தான் அணியில் ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் இருவரும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். மேலும் அதற்கு அடுத்து மூன்றாவது இடத்தில் ரியான் பராக் பேட்டிங் செய்ய விரும்புகிறார். இதனால் சாம்சன் நான்காவது இடத்திற்கு தான் செல்ல வேண்டும். இந்திய அணிக்காக தொடக்க இடத்தில் விளையாடி வரும் ஒரு வீரர் ஐபிஎல் அணிக்கு நான்காவது இடத்தில் விளையாட விரும்புவாரா? நிச்சயமாக கிடையாது. அவரது பார்வையில் ராஜஸ்தான் அணி இனி மாறாது, என்று அவர் நினைத்திருக்கலாம்.

இதையும் படிங்க:துலிப் டிராபி 2025.. 6 அணிகள் 6 ஸ்டார் கேப்டன்கள்.. களத்தில் முக்கிய வீரர்கள்.. முழு அட்டவணை பட்டியல்

அவர்கள் இளைஞர்களை ரொம்பவே ஆதரிக்கிறார்கள் இல்லையா. இதுதான் ராஜஸ்தான் அணியில் இருக்கிற ஒரு கலாச்சாரம். இதனால்தான் அவர் தன்னை முன்னேறி அடுத்த இடத்திற்கு நகர்த்த வேண்டும் என்று நினைக்கிறார். அப்போதுதான் நான் வேறு இடத்திற்கு சென்று பேட்டிங் ஆரம்பிச்சு இந்திய அணியில் ஓபனிங் இடத்திற்கு இன்னும் நன்றாக போட்டியிட முடியும் என்று அவர் யோசித்து இருக்க கூடும்” என உத்தப்பா பேசியிருக்கிறார்.

- Advertisement -
Published by