சாம்சன் ஒருத்தருக்காக.. ராஜஸ்தான் சிஎஸ்கே கிட்ட இந்த 3 வீரர்களை கேக்குது.. கொஞ்சம் ஓவரா? – ராபின் உத்தப்பா பேச்சு

0
110
Dhoni

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணிக்கு டிரேடிங் செய்வதற்கு மூன்று வீரர்களை கேட்பதாக ராபின் உத்தப்பா தெரிவித்திருக்கிறார்.

தற்போது சிஎஸ்கே அணிக்கு சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகத்தால் டிரேடிங் செய்யப்படலாம் என்கின்ற தகவல் பலராலும் பரவலாக சொல்லப்பட்டு வருகிறது. அதே நிலையில் ஒரு வீரருக்காக மூன்று வீரர்களை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் கேட்டிருப்பதாக தற்பொழுது தெரிய வருகிறது.

- Advertisement -

இரு அணிகளின் பிரச்சனை

சிஎஸ்கே அணிக்கு நீண்ட காலமாக கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பராக மகேந்திர சிங் தோனி இடம் பெற்று வருகிறார். இதன் காரணமாக அந்த அணிக்கு பேட்டிங்கில் வெற்றி பெற்ற ஒரு இந்திய விக்கெட் கீப்பர் தேவையாக இருக்கிறது. கான்வே போன்ற மாற்று விக்கெட் கீப்பர் இருந்தாலும் சஞ்சு சாம்சன் போன்ற இந்திய விக்கெட் கீப்பர் தேவை.

அதே சமயத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கீழ் வரிசையில் சரியான பேட்ஸ்மேன்கள் இல்லை. மேலும் வெளிநாட்டு சுழல் பந்துவீச்சாளர்களை வைத்து விளையாடுகிறார்கள். இதன் காரணமாக பேட்டிங் யூனிட்டில் வெளிநாட்டு பேட்ஸ்மேன்களை கொண்டுவர முடியவில்லை. எனவே இரண்டு அணிகளும் இதை சரி செய்து கொள்ள பார்க்கும்.

- Advertisement -

மூன்று வீரர்களை கேட்கிறார்கள்

இதுகுறித்து ராபின் உத்தப்பா பேசும்பொழுது ” ராஜஸ்தான் அணியிடம் என்ன இல்லை என்று பார்த்தால் அவர்களுக்கு ஆறாவது இடத்தில் ஹெட்மாயர் இருக்கிறார். ஆனால் அதற்கு கீழே போட்டியை முடித்துக் கொடுக்கக்கூடிய நல்ல பினிஷர் இல்லை. எனவே அவர்கள் சிஎஸ்கே அணி இடம் இருந்து சாம் கரன் மற்றும் விஜய் சங்கர் ஆகியோரை எதிர்பார்க்கலாம். விஜய் சங்கர் அஸ்வின் உடன் இணைந்து விளையாடலாம். அவர் ஒரு நல்ல பவுலர் ஆனால் சிஎஸ்கே பயன்படுத்திக் கொள்ளவில்லை”

இதையும் படிங்க : கில்லுக்கு பட்டுக்கம்பளம்.. ஜெய்ஸ்வாலுக்கு புறக்கணிப்பு அநியாயமா?.. இந்திய ரசிகர்கள் கொதிப்பு

“அதே சமயத்தில் சிஎஸ்கே சஞ்சு சாம்சனை சேர்த்துக் கொள்ளும் பொழுது அவர்களுக்கு ஒரு இந்திய விக்கெட் கீப்பர் கிடைத்து விடுவார். இது அவர்களுக்கு மிகவும் நல்லதாக அமையும். சிஎஸ்கே அணி நிர்வாகம் ஏற்கனவே தோனி இடத்திற்கு சாம்சனை பார்த்து விட்டது என்று நினைக்கிறேன். அவர் சிஎஸ்கே அணியில் இணைந்தால் அவர்களுக்கு நிறைய நல்லது நடக்கக்கூடும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -