சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட உள்ளது.
இந்த சூழ்நிலையில் சிஎஸ்கேவின் தற்போதைய நிலை குறித்து அதன் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
எம்எஸ் தோனி மீண்டும் கேப்டன்
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 போட்டிகளில் விளையாடி 4ல் தோல்வியடைந்து ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதிரடியாக விளையாடக்கூடிய பவர் ஹிட்டர் பேட்ஸ்மேன்கள் சிஎஸ்கே அணியில் இல்லாதது ஒரு மிகப்பெரிய பின்னடைவாக அந்த அணிக்கு அமைந்துள்ளது. தற்போது மேலும் ஒரு பின்னடைவாக அணியின் மூன்றாவது வரிசை பேட்ஸ்மேன் மற்றும் கேப்டனான ருத்ராஜ் கெய்க்வாட் கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த தொடரிலிருந்து முழுவதுமாக வெளியேறி இருக்கிறார்.
எனவே அவருக்கு பதிலாக முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி மீண்டும் சென்னை அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்று இருக்கிறார். இது நல்ல விஷயமாக பார்க்கப்பட்டாலும் அணியின் ஒரு முன்னணி பேட்ஸ்மேன் வெளியேறுவது சிஎஸ்கே அணிக்கு மேலும் ஒரு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சூழ்நிலையில் அதன் முன்னாள் வீரர் உத்தப்பா இந்த சூழ்நிலை குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
அணியில் உள்ள பிரச்சனை மாறுமா?
அது குறித்து இவர் விரிவாக கூறும்போது “எம் எஸ் தோனி மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்று இருப்பது அணியின் போக்கை தானாகவே மாற்றும் என்று நான் நினைக்கவில்லை. அணியில் உள்ள நிறைய பிரச்சனைகளை எப்படி சரி செய்வீர்கள்? ருத்து போன்ற ஒரு முன்னணி பேட்ஸ்மேன் தற்போது வெளியேறி இருப்பது அந்த அணிக்கு மேலும் சிக்கலை உண்டாக்கி இருக்கிறது. பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கான்வே 69 ரன்கள் எடுத்து ஓரளவு நல்ல நிலையில் இருக்கிறார்.
இதையும் படிங்க:ஆர்சிபி பலவீனம் எனக்கு தெரியும்.. இத எங்களுக்கு சாதகமா மாத்த ட்ரை பண்ணேன் – டெல்லி கேப்டன் பேட்டி
ரச்சின் முதல் போட்டியைத் தவிர மற்ற போட்டிகளில் தடுமாறி வருகிறார். ராகுல் திருப்பாதி இனி மூன்றாவது இடத்தில் தான் வர வேண்டும். சிஎஸ்கே கேப்டன் இடத்தை யார் நிரப்புவார்கள்? ஷாம் கரன் அந்த இடத்தை நிரப்புவாரா? அல்லது அணியில் ஏதேனும் ஒரு மாற்றம் செய்யப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இது ஒரு சிஎஸ்கேவின் நம்பிக்கையை அதிகப்படுத்துமா என்பதையும் இன்றைய போட்டியில் பார்க்கலாம்” என்று உத்தப்பா கூறியிருக்கிறார்.






