ஆர்சிபி பலவீனம் எனக்கு தெரியும்.. இத எங்களுக்கு சாதகமா மாத்த ட்ரை பண்ணேன் – டெல்லி கேப்டன் பேட்டி

0
98

நேற்று நடைபெற்ற ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் தொடரின் 24 ஆவது போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின.

இதில் வெற்றி பெற்ற விதம் குறித்து டெல்லி அணியின் கேப்டன் அக்சார் பட்டேல் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி தொடக்கம் சிறப்பாக இருந்தாலும் அதற்கு பின்னால் வந்த வீரர்கள் சரியாக விளையாடாத காரணத்தினால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் பில் சால்ட் 17 பந்துகளில் 37 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். இதில் விராட் கோலி 22 ரன்கள் குவித்த நிலையில் வெளியேறினார்.

அதற்குப் பின்னால் வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. 30 ரன்களுக்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்த நிலையில், கேஎல் ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி போட்டியை கடைசிவரை எடுத்துச் சென்றார். முடிவில் டெல்லி அணி 17.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடிய கே எல் ராகுல் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் வெற்றி குறித்து அக்சார் பட்டேல் கூறும்போது “அணி விளையாடும் விதத்தை பார்க்கும் போது நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்றிருப்பது பெரிய நம்பிக்கையை எங்களுக்கு கொடுக்கிறது. பெங்களூர் அணி வேகபந்துவீச்சை சிறப்பாக விளையாடும் என்பதால் தொடக்கத்திலேயே சுழலை பயன்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தேன். பந்து பேட்டுக்கு நின்று வந்தது மற்றும் ஆடுகளத்தில் சிறிய பவுன்ஸ் இருந்தது. எனவே பவர் பிளேவில் சுழற் பந்துவீச்சாளர்களை அடிப்பது கடினம் என்று நினைத்தேன். நான் வீசிய 19 வது ஓவர் ஒரு யுக்தியை ஏற்படுத்துவதற்கான வழி என்று கூறலாம்.

இதையும் படிங்க:என்னால ஏத்துக்கவே முடியல.. பவர் ஹிட்டர்கள் இருந்தாலும் இதை கவனிக்கலனா நிலைமை இதுதான் – ஆர்சிபி கேப்டன்

குல்தீப் பல வருடங்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆனால் 18வது விப்ராஜ் வீசியது ஒரு மிகப்பெரிய விஷயம். அது அவருக்கான நம்பிக்கையை பெருமளவு அதிகப்படுத்தி இருக்கும். ராகுல் போன்ற ஒருவர் எங்கள் அணியில் இருப்பது என் வேலையை பெரும்பாலும் எளிதாக்குகிறது. அவரைப் போன்ற ஒருவர் எங்கள் அணிக்கு கிடைத்திருப்பது மிகப்பெரிய விஷயமாகும். அவர் ஒரு சிறந்த இன்னிங்ஸ் விளையாடுகிறார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து அவர் தனது மிகச் சிறந்த ஃபார்மை வெளிப்படுத்தி வருகிறார்” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -