இந்திய கிரிக்கெட் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா செய்து வரும் ஒரு விஷயம் யாராலும் செய்ய முடியாத ஒன்று என ராபின் உத்தப்பா மயங்க் யாதவை உதாரணம் காட்டி பாராட்டி பேசி இருக்கிறார்.
தற்போது தனது வித்தியாசமான பந்துவீச்சு ஆக்சன் மூலமாக உலகின் தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளராக பும்ரா இருந்து வருகிறார். வித்தியாசமான பந்துவீச்சு ஆக்சன் இருக்கும் பொழுது நிச்சயம் பெரிய காயங்கள் வந்து விளையாட்டை விட்டு விலக வேண்டியது இருக்கும். ஆனால் இதை பும்ரா சமாளித்து வருவது ஆச்சரியமானது என உத்தப்பா கூறியிருக்கிறார்.
தற்போது மயங்க் யாதவ் இந்தியாவின் அதிவேக பந்துவீச்சாளராக இருக்கிறார். ஆனால் அதிகப்படியான வேகத்தில் பந்து வீச அவரது உடல் ஒரு பக்கமாக சாய்கிறது. இதன் காரணமாக அந்த பக்கத்தில் அழுத்தம் அதிகம் ஏற்படுகிறது. இதனால் உடலின் பக்கவாட்டில் ஒரு பகுதியில் காயம் ஏற்பட்டு விளையாட முடியாமல் அடிக்கடி பாதிக்கப்படுகிறார்.
அதே சமயத்தில் பும்ரா வித்தியாசமான பந்துவீச்சின் காரணமாக முதுகுப் பகுதிக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இதனால் பும்ரா காயம் அடைந்தாலும் கூட மயங்க் யாதவ் மாதிரியான இளம் வீரர் காயமடையும் அளவிற்கு அடிக்கடியோ அல்லது பெரிய காயத்திற்கோ உள்ளாவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ராபின் உத்தப்பா கூறும் பொழுது “பும்ரா மிகவும் அதிர்ஷ்டசாலி, அதே நேரத்தில் மிகவும் கடினமான உழைப்பாளி. கடவுளிடம் வரம் வாங்கி வந்த வீரர். இந்த அளவிற்கு அதிரடியான பந்துவீச்சை கொண்டிருக்கும் பொழுதும் அவர் பெரிய காயம் அடையாமல் இருப்பது ஆச்சரியமானது. அவருக்கும் காயங்கள் இருந்தது ஆனால் பெரிய காயங்கள் இல்லை. ஆனால் இது போன்ற வித்தியாசமான அதிரடி பந்துவீச்சை கொண்டிருப்பவர்கள் பெரிய காயத்திற்கு உள்ளாவார்கள். உதாரணத்திற்கு மயங்க் யாதவை பாருங்கள்”
இதையும் படிங்க : 35 ஓவர் 225 ரன் கொடுத்துட்டேன்.. நான் சரியா பண்ணல.. ஆனா அடுத்த இத செய்வேன் – பிரசித் கிருஷ்ணா உறுதி
“பும்ரா தனது உடலுக்கு ஏற்ற வகையில் தனது பந்துவீச்சை வைத்திருக்கிறார். மேலும் அவரது புதுமைகளையும் கொண்டு வருகிறார். அவர் தனது பந்துவீச்சில் சேர்த்து இருக்கும் அவுட் ஸ்விங் உண்மையில் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. இந்த மாதிரியான பந்துவீச்சு ஆக்சன் கொண்ட ஒருவர் செய்ய முடியாத ஒன்றை செய்து இருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.