இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் மோசமான தோல்வியை சந்தித்து பெரிய அளவில் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்தும் விளையாடாத இந்திய வீரர் குறித்து ராபின் உத்தப்பா சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
ஒரு போட்டியில் கூட வாய்ப்பு தரவில்லை
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் தோல்விக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வில் சில சமரசங்களை செய்து இந்திய உள்நாட்டுத் தொடர்களில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்தது. அதில் ஒரு சிறந்த வீரராக கருதப்படும் அபிமன்யு ஈஸ்வரன் இந்திய ஏ அணியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக பயிற்சி போட்டியில் ஈடுபட்ட நிலையில் சர்வதேச போட்டியில் அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.
உள்நாட்டு கிரிக்கெட்டில் ஒவ்வொரு ஆண்டும் 1000 ரன்களுக்கு மேல் அடித்து தனது திறமையை நிரூபித்த நிலையிலும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியில் கூட அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும் இந்திய அணியில் படிக்கல் மற்றும் கில் போன்ற ஃபார்ம் இல்லாத வீரர்கள் விளையாடிய போதும் இவருக்கு வாய்ப்பு கிடைக்காத ஆதங்கத்தை இந்திய முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா வெளிப்படுத்தி பேசி இருக்கிறார்.
அடுத்த புஜாராவை இந்திய அணி மிஸ் பண்ணுது
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “அவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் ஒவ்வொரு ஆண்டும் 1000 ரன்கள் எடுத்து வருகிறார். நீங்கள் அவருக்கு வாய்ப்பு கொடுத்து விளையாட வைக்கவில்லை என்றாலும் தவறான நம்பிக்கையை கொடுக்காதீர்கள். இந்த சுற்றுப்பயணத்தில் அபிமன்யு ஈஸ்வரன் ஒரு புஜாராவாக மாறி இருக்கலாம். அவருக்கு இந்த தொடரில் எந்த ஒரு வாய்ப்பும் கிடைக்கவில்லை. நீங்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடி வருகிறீர்கள் என்றும் சர்வதேச கிரிக்கெட்டை சேர்ந்தவர் அல்ல என்று அவரது முகத்திற்கு நேராக வெளிப்படையாக கூறி விடுங்கள்.
இதையும் படிங்க:ரோகித்னால முடியலன்னா.. ஜெய்ஸ்வால் இந்த ட்ரிக் யூஸ் பண்ண முடியும்.. அதனால ஓபனிங் இவங்கதான் பெஸ்ட் – கவாஸ்கர் கருத்து
இதுபோல நிறைய வீரர்கள் இருக்கிறார்கள், கருண் நாயர் மூன்று சதங்கள் அடித்த பிறகு நீக்கப்பட்டார். ஏன் இரண்டு போட்டியில் மட்டுமே அவர் சிறப்பாக விளையாடதால் அவரது நீக்கம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. புஜாராவை ஆஸ்திரேலியா தொடரில் தேர்வு செய்யாதது மிகப்பெரிய தவறு. இருப்பினும் அவரைப் போன்ற ஒரு வீரரை இந்திய அணி தேர்வு செய்திருக்க வேண்டும்” என்று ராபின் உத்தப்பா கூறியிருக்கிறார். புஜாரா போன்று ஒரு வீரர் இல்லாத நிலையில் இந்திய அணி பேட்டிங்கில் மிகவும் தடுமாறியது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது என்று கூறலாம்.






