செமி பைனலில் இந்திய அணியின் விருப்பம் எது.? தென்னாப்பிரிக்கா அல்லது ஆஸ்திரேலியா.? ராபின் உத்தப்பா ஓபன் டாக்

0
290

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் லீக் தொடரில் நாளை நடைபெற உள்ள கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா அரை இறுதி ஆட்டம் குறித்து சில முக்கிய கருத்துகளை பேசி இருக்கிறார்.

- Advertisement -

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி

இந்திய கிரிக்கெட் அணி இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களில் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தியிருக்கும் நிலையில் அதன் புள்ளி பட்டியலில் தற்போது முதல் இடத்தில் இருக்கிறது. நாளை இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே கடைசி ஆட்டம் நடைபெற உள்ளது. இதில் இந்திய அணி வெற்றி பெற்றால் நியூசிலாந்து அணிக்கு எதிராக தனது அரை இறுதி ஆட்டத்தில் விளையாடும்.

ஒருவேளை தோல்வி அடைந்தால் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக தனது அரை இறுதி ஆட்டத்தில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ளக் கூடாது என்று ரசிகர்கள் விரும்புகின்றனர். ஏனென்றால் ஐசிசி தொடரின் அரை இறுதிகளில் எப்போதுமே சிறப்பாக செயல்படக்கூடிய ஆஸ்திரேலியா அணி, அபாயகரமானது என்பதால் இது போன்ற கருத்துக்கள் நிலவிவருவது குறித்து இந்திய முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

ராபின் உத்தப்பா கருத்து

இதுகுறித்து உத்தப்பா கூறும் போது ” உண்மையிலேயே ஒரு கிரிக்கெட் வீரராக, நான் கூற வருவது என்னவென்றால் நமக்கு எதிராளியாக யார் இருக்கப் போகிறார்கள் என்பது முக்கியமே கிடையாது. ஒரு அணியாக நாம் யாரை எதிர்கொள்ள போகிறோம்? எந்த அணிக்கு எதிராக விளையாட போகிறோம் என்பதைவிட நமது பார்ம் மற்றும் வலிமையில் கவனம் செலுத்த வேண்டும். எனவே இந்த அணிக்கு எதிராக விளையாட வேண்டும், இதற்கு எதிராக விளையாடக்கூடாது என்பது முக்கிய விஷயமே கிடையாது.

இதையும் படிங்க:CT 2025.. தெ.ஆ வெற்றி பெற்று இந்திய அணிக்கு வைத்த செக்.. அரைஇறுதி யாருடன்?. முடிவு செய்யும் ரோஹித் அணி.. விபரம்

தன்னம்பிக்கையும் மற்றும் பார்மோடு இருக்கும் எந்த ஒரு அணியும் இது போன்ற வழிகளில் எப்போதுமே சிந்திக்காது. ஆட்டத்தை வெல்ல நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதில் மட்டுமே இந்திய அணி கவனம் செலுத்துமே தவிர இது போன்ற விஷயங்களில் தனது கவனத்தை செலுத்தாது” என்று உத்தப்பா கூறுகிறார். கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பை இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -