நான் சிஎஸ்கேவை எதிர்த்தது இதற்காகத்தான்.. வெஸ்ட் இண்டீஸ்காக செய்யட்டும் தப்பில்லை – ராபின் உத்தப்பா கருத்து

0
40
Uthappa

சிஎஸ்கே கிரிக்கெட் அகாடமி வெளிநாட்டு வீரர்களுக்கு உதவுவது குறித்து தான் முற்றிலும் எதிரானவன் கிடையாது என ராபின் உத்தப்பா விளக்கம் அளித்திருக்கிறார்.

தற்போது சிஎஸ்கே அகாடமியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் டெடி பிஷப், ஜூவல் ஆண்ட்ரூ, ஜோர்டான் ஜான்சன், அக்கீம் அகஸ்டே, கிர்க் மெக்கென்சி, மேத்யூ நந்து மற்றும் கெவின் விக்ஹாம் ஆகியோர் சிறப்பு பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ராபின் உத்தப்பாவின் எதிர்ப்பு

நியூசிலாந்து அணி இந்தியா வந்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு முன்பாக, சிஎஸ்கே அணிக்காக விளையாடும் நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்தரா சிஎஸ்கே கிரிக்கெட் அகாடமியில் பல்வேறு விதமான சுழல் பந்துவீச்சு ஆடுகளத்தில் பயிற்சி பெற்றார். இதற்கு சிஎஸ்கே அகாடமி அனுமதி அளித்தது.

இதைத்தொடர்ந்து பெங்களூர் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 134 ரன்கள், இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டம் இழக்காமல் 39 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தார். சிஎஸ்கே கிரிக்கெட் அகாடமி எதிரணி வீரருக்கு செய்த உதவி சரியானது கிடையாது என ராபின் உத்தப்பா விமர்சனம் செய்திருந்தார்.

- Advertisement -

நான் இதற்கு எதிரானவன் இல்லை

தற்பொழுது சிஎஸ்கே அகாடமியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பயிற்சி பெறுவது குறித்து பேசி உள்ள ராபின் உத்தப்பா ” மக்களிடம் இது குறித்து என்ன விதமான பொதுவான கருத்து இருக்கிறது என்பதை நான் தெரிந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் விரும்புகிறேன். வெஸ்ட் இண்டிஸ் மட்டுமல்ல வேறு எந்த நாடுமே இப்படி வீரர்களை இங்கு அனுப்பி இருந்தாலும் நான் பொருட்படுத்த மாட்டேன். ஏனென்றால் கிரிக்கெட்டில் இப்படியான பரிமாற்றங்கள் தேவை. இருதரப்புமே இதனால் பயனடைகிறார்கள்”

“நான் இதற்கு முற்றிலும் எதிரானவன் கிடையாது. வீரர்கள் முன்னேற்றம் அடைய வேண்டும் அதற்குத் தேவையான அனைத்தும் செய்யப்பட வேண்டும் என்று விரும்புகிறேன். எதிர்காலத்திற்காக இளம் வீரர்கள் வெளிநாட்டில் என்ன கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ள இது உதவுகிறது”

இதையும் படிங்க : இந்தியா – ஆஸி பிரதமர் XI பயிற்சி போட்டி.. எப்போது நடக்கிறது.. எந்த டிவியில் பார்க்கலாம்? – முழு விபரங்கள்

“இதில் சர்ச்சைக்குரிய ஒரு விஷயம் என்னவென்றால், எந்த ஒரு சர்வதேச வீரருக்கும், இந்தியாவில் தொடர்கள் இருக்கும்பொழுது, இதுபோன்ற தயாரிப்பு பயிற்சி முகாம்கள் தவிர்க்கப்பட வேண்டும். நான் எதிர்ப்பது இதை மட்டும்தான்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -