” நீ என்னுடைய பிளேயிங் லெவனில் நேரடியாக நுழைய முடியாது ” – தோனியுடனான முதல் சந்திப்பில் பேசியதை பகிர்ந்துள்ள ராபின் உத்தப்பா

0
848
Robin Uthappa and MS Dhoni

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து டிரேடிங் மூலமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ராபின் உத்தப்பா வந்து சேர்ந்தார். நான்கு போட்டிகளில் மட்டுமே அவருக்கு வாய்ப்பு கிடைத்தாலும் அந்த நான்கு போட்டிகளில் மொத்தமாக 113 ரன்கள் குவித்தார். குறிப்பாக டெல்லி அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் தகுதிச்சுற்று ஆட்டத்தில் 43 பந்துகளில் 64 ரன்கள் குவித்து அசத்தினார்.

கடந்த ஆண்டும் மிக சிறப்பாக விளையாடிய இதுவரை இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு பிப்ரவரி மாதம் நடந்து முடிந்த மெகா ஏலத்தில் 2 கோடி ரூபாய்க்கு மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் இவரை கைப்பற்றியது.

2 கோடி ரூபாய்க்கு விலை போன ராபின் உத்தப்பா கடந்த ஆண்டு போலவே தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரிலும் முதல் மூன்று போட்டிகளில் ஒரு அரைசதம் அடித்து மொத்தமாக இதுவரை 91 ரன்கள் குவித்துள்ளார்.

வெளிப்படையாக என்னிடம் பேசிய மகேந்திர சிங் தோனி

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே மகேந்திரசிங் தோனி தன்னிடம் தொடரின் ஆரம்பத்தில் இருந்து தனக்கு ( ராபின் உத்தப்பாவுற்கு) வாய்ப்பு கிடைப்பது குறித்து உறுதியாகக் கூறிவிட முடியாது என்றும், ஒரு சில நாட்கள் எடுத்துக் கொள்ளலாம் என்றும் நேர்மையாக வெளிப்படையாக கூறியதாக கூறியுள்ளார். அவர் அவ்வாறு எந்தவித ஒளிவு மறைவும் இன்றி வெளிப்படையாக பேசியது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று ராபின் உத்தப்பா தற்போது அதை நினைவு கூர்ந்துள்ளார்.

அவ்வாறு மகேந்திர சிங் தோனி பேசிய பின்பு 4-5 நாட்களுக்கு ஒருமுறை, ஒரு பயிற்சியாளர் அல்லது மற்றவர் என்னிடம் வந்து பேசுவார்கள், என்றும் உத்தப்பா தற்பொழுது கூறியுள்ளார். தன்னை நல்ல மன நிலையில் வைத்துக் கொள்வதற்காக அவர்கள் அவ்வாறு தன் மீது அக்கறை காட்டிய விதம் தன்னை மிகவும் கவர்ந்தது என்று பெருமையாக ராபின் உத்தப்பா கூறியுள்ளார்.

ஆனால் ராபின் உத்தப்பா முதல் போட்டியில் இருந்து தற்பொழுது அற்புதமாக விளையாடி வருகிறார். உத்தப்பா சிறப்பாக விளையாடுவது ஒரு பக்கம் இருப்பினும் மறுபக்கம் சென்னை அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் 3 தோல்வி அடைந்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.