இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் சமீபத்தில் முடிவடைந்தது. இதில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி 3-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியது.
இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா டெஸ்ட் தொடரின் போது பரவிய சர்ச்சைக்குரிய செய்தி குறித்து சில முக்கிய கருத்துகளை பகிர்ந்திருக்கிறார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா கேப்டன் ஆக விளங்கி இந்திய அணி வெற்றி பெற்றது. அதற்கு பிறகு இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா திரும்பவும் கேப்டன் பொறுப்பை ஏற்க, அந்தத் தொடரில் மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகள் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்த சூழ்நிலையில் கடைசி போட்டியில் ரோகித் சர்மா தனது கேப்டன் பதவியை விட்டு விலகிய நிலையில் போட்டியிலும் விளையாடாததால் அவருக்கு பதிலாக பும்ரா கேப்டன் பொறுப்பை ஏற்றார்.
ஆனால் அவரும் போட்டியின் பாதியில் காயத்தின் காரணமாக வெளியே அவருக்கு பதிலாக முன்னாள் கேப்டன் விராட் கோலி இந்திய அணிக்கு தலைமை தாங்கினார். இந்த சூழ்நிலையில் இந்திய மூத்த வீரர் ஒருவர் தன்னை இடைக்கால கேப்டனாக காட்ட முயற்சிப்பதாக தகவல்கள் பரவிய நிலையில் தற்போது அது குறித்து ராபின் உத்தப்பா உரிய விளக்கம் அளித்திருக்கிறார். இது போன்ற செய்திகள் அணிக்குள் நிலவும் நேர்மறையான சூழலை பாதிப்படையும் வகையில் இருப்பதாக சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இது குறித்து உத்தப்பா விரிவாக கூறும்போது “நான் ஒரு வகையான நபர், அணிக்குள் என்ன நடந்தாலும் அதனை நேரடியாக குறிப்பிட்டு பேசுவேன். அணி வீரர்கள் குறித்து எனக்கு நன்றாக தெரியும் என்பதால் ஒரு சுற்றுப்பயணம் அங்கு ஒரு போட்டி நடக்கும் போது நான் யாரிடமும் அது குறித்து பேசுவதில்லை. ஏனென்றால் ஒவ்வொரு வீரருக்கும் அவரது வழக்கம் மற்றும் மனநிலை என்று இருக்கிறது. அந்த நேரத்தில் அவர்களோடு உரையாடுவது சரியல்ல.
இதையும் படிங்க:34 ஓவர் 241 ரன்.. ஸ்மிருதி மந்தனா தனித்துவ சாதனை.. இந்திய பெண்கள் அணி அயர்லாந்தை வீழ்த்தியது
இதனால் நான் போட்டியின் போது யாரிடமும் அதிகமாக பேச மாட்டேன். வீரர்கள் மோசமான முறையில் விளையாடினால் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஏதாவது கூறுவேன், அதுவே நன்றாக விளையாடினால் அவர்களுக்கு வாழ்த்துக்கள் செய்தியை அனுப்புவேன். எனவே இதில் மக்கள் ஊகிக்கக் கூடிய ‘மிஸ்டர் பிக்ஸ் இட்’ யார் என்று தெரியவில்லை. என்னை பொருத்தவரை இந்திய அணிக்குள் இது நெருப்பில்லாமல் புகைய வாய்ப்பில்லை. இது மூத்தவிரரை குறிப்பிடலாம் அணிக்குள் மூத்த வீரரைக் குறிப்பிடலாம். கேஎல் ராகுல் அல்லது விராட் கோலியாக இருக்கும் ராகுல் மூத்த வீரர் இல்லை என்பதால் இதில் மற்றொரு பக்கத்தையும் பார்க்க வேண்டி உள்ளது. ஒரு முக்கியமான தொடர் நடைபெறும் போது இது போன்ற செய்திகள் வெளி வருவது சரியில்லை” என்று கூறியிருக்கிறார்.