34 ஓவர் 241 ரன்.. ஸ்மிருதி மந்தனா தனித்துவ சாதனை.. இந்திய பெண்கள் அணி அயர்லாந்தை வீழ்த்தியது

0
712
Mandhana

இந்தியா வந்துள்ள அயர்லாந்து பெண்கள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய பெண்கள் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தற்போது ஒருநாள் கிரிக்கெட் உலக சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடுவதற்காக அயர்லாந்து பெண்கள் அணி இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்திருக்கிறது. இதில் முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இந்த தொடரில் கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் இடம் பெறாததால் கேப்டனாக ஸ்மருதி மந்தனா செயல்படுகிறார்.

- Advertisement -

சமாளித்து விளையாடிய அயர்லாந்து

இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி முதலில் தைரியமாக பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணிக்கு தொடக்க வீராங்கனை கேபி லீவிஸ் சிறப்பாக விளையாடி 129 பந்துகளில் 15 பவுண்டரிகள் உடன் 92 ரன்கள் குவித்து அயர்லாந்து அணிக்கு அடித்தளத்தை ஏற்படுத்த முயற்சி செய்தார்.

இதைத்தொடர்ந்து மிடில் வரிசையில் அயர்லாந்து அணிக்கு லீ பால் 73 பந்துகளில் 7 பவுண்டரிகள் உடன் 59 ரன்கள் எடுத்தார். அயர்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு சமாளித்து விளையாடி 238 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் தரப்பில் பந்துவீச்சில் பிரியா மிஸ்ரா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

ஸ்மிருதி மந்தனா சாதனை

இதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய இந்தியா அணிக்கு கேப்டன் மற்றும் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அதிரடியாக 29 பந்தில் ஆறு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 41 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் 95 இன்னிங்ஸ்களில் நான்காயிரம் ரண்களை எட்டினார். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் வேகமாக 4000 ரன்கள் எடுத்த இந்திய வீராங்கனை என்கின்ற சாதனையை படைத்தார். இதில் உலக அளவில் ஆஸ்திரேலியாவின் பெலிண்டா கிளார்க் 86 இன்னிங்ஸ்களில் அதிவேகமாக ஒருநாள் கிரிக்கெட்டில் நான்காயிரம் ரன்கள் சர்வதேச அளவில் எடுத்திருக்கிறார்.

இதையும் படிங்க : ஜடேஜா அக்சர் படேல் என்னை பாதிச்சாங்க.. அதனால இந்த பையனுக்கு வாய்ப்பு கொடுத்தேன் – ஸ்டீவ் ஸ்மித் பேட்டி

இதற்கடுத்து தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு இன்னொரு தொடக்க வீராங்கனை பிரட்டிகா ராவல் 96 பந்தில் 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 89 ரன்கள் எடுத்தார். அடுத்து தேஜல் ஹசப்னிஸ் அதிரடியாக ஆட்டம் இழக்காமல் 46 பந்தில் 53 ரன்கள் எடுத்தார். இதனால் இந்திய பெண்கள் அணி 34.3 ஓவரில் 241 ரன்கள் எடுத்து அதிரடியாக வெற்றி பெற்றது. மேலும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியை வென்று தொடரில் முன்னிலையும் வகிக்கிறது.

- Advertisement -