இந்த 3 மாநிலத்தில் இருந்து வரலன்னா.. இப்படிதான் இந்திய அணியில் இடம் பிடிக்க போராடனும்.. ருதுராஜ் குறித்து ராபின் உத்தப்பா

0
29

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் ஐந்து டி20 கிரிக்கெட் போட்டிகள் வருகிற 11ம் தேதி முதல் நடைபெற உள்ளது.

இந்த சூழ்நிலையில் கடந்த தென்னாப்பிரிக்க தொடரில் சதம் அடித்து அசத்திய சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இடம் பெறவில்லை. இந்த சூழ்நிலையில் அதற்கான காரணத்தை ராபின் உத்தப்பா கூறி இருக்கிறார்.

- Advertisement -

பல தொடர்களுக்குப் பிறகு மீண்டும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் வாய்ப்பு பெற்ற சிஎஸ்கே கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் முதல் இரண்டு போட்டிகளில் சிறப்பாக செயல்படாவிட்டாலும் மூன்றாவது போட்டியில் தன் திறமையை உலகுக்கு நிருபித்தார். மூன்றாவது போட்டியில் சதம் அடித்து தன் திறமையை நிரூபித்த நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரிலும் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அந்தத் தொடரில் அவரது பெயர் இடம் பெறாதது அவர் மட்டுமல்லாமல் இந்திய ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் என பலருக்கும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சூழ்நிலையில் இது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “நண்பா இதை ஜீரணிப்பது என்பது மிகவும் கடினம். இது மனதளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும், எனவே நீங்கள் இப்போது இளைப்பாற சில நல்ல விஷயங்களை தேர்ந்தெடுக்க வேண்டி இருக்கிறது. இந்த சூழ்நிலையில் அதனை செய்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. இந்திய கிரிக்கெட்டில் உள்ள சவாலான விஷயம் என்னவென்றால் நீங்கள் தொடர்ந்து உயிர் பிழைக்கும் மனநிலையிலேயே செயல்படுகிறீர்கள்.

இதையும் படிங்க:33 ஓவர் 299 ரன்.. கேப்டன் ஸ்ரேயாஸ் கலக்கல் பேட்டிங்.. ஜெய்ஸ்வால் சூர்யகுமார் ஏமாற்றம் – விஜய் ஹசாரே 2025

இந்த சூழ்நிலையில் இருந்து வெளி வருவதற்கு அபரிமிதமான உறுதி மற்றும் அபரிமிதமான சுய உரையாடல் மற்றும் நேர்மறையான உரையாடல் போன்றவை தேவைப்படுகிறது. நீங்கள் தொடர்ந்து போராட வேண்டும் போராடுவதற்கான வழியை கண்டுபிடிக்க வேண்டும். நீங்கள் மும்பை, டெல்லி அல்லது பஞ்சாப் போன்ற மூன்று மாநிலங்களில் இருந்து வரவில்லை என்றால் நீங்கள் அந்த மாநிலங்களில் ஏதேனும் ஒன்றைச் சேர்ந்தவராக இருக்கவில்லை என்றால் நீங்கள் தொடர்ந்து உங்களை உந்தித் தள்ளிக் கொண்டு இருக்க வேண்டும்” என்று அவர் பேசியிருக்கிறார்.

- Advertisement -