நான் அசிங்கமா நடந்துக்கிட்டேனா.. சரத்குமார் என் பையன்யா.. நடந்தது இதுதான் – அஸ்வின் விளக்கம்

0
362
Ashwin

இந்த ஆண்டு டிஎன்பிஎல் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் கேப்டன் மற்றும் பயிற்சியாளராக செயல்பட்ட திண்டுக்கல் டிராகன்ஸ் அணி இறுதிப் போட்டியில் லைக்கா கோவை கிங்ஸ் அணியை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த தொடரில் தன் அணி வீரர் சரத்குமாரை கடுமையான வார்த்தைகளில் ரவிச்சந்திரன் அஸ்வின் திட்டிய வீடியோ பரவியது. இது குறித்து தற்பொழுது ரவிச்சந்திரன் அஸ்வின் விளக்கம் அளித்திருக்கிறார்.

திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு கேப்டன், பயிற்சியாளர் மற்றும் பந்துவீச்சாளர் என மூன்று பொறுப்புகளில் திறமையாக செயல்பட்டது மட்டும் இல்லாமல், பேட்டிங்கிலும் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இறுதிப்போட்டி வரையில் கடைசி மூன்று நாக் அவுட் போட்டிகளிலும் தொடர்ந்து அதிரடி அரைசதங்கள் அடித்து இருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் எலிமினேட்டர் சுற்றுப் போட்டியில் தன் அணி வீரர் சரத்குமார் பந்தைத் தட்டி விளையாடி அணியை வெற்றிக்கு எடுத்துச் செல்லாமல், அந்த நேரத்தில் தேவையில்லாமல் பெரிய ஷாட் பேட்-டை விளையாட சுற்றிக் கொண்டிருந்தார். இதை வெளியில் இருந்து பார்த்த ரவிச்சந்திரன் அஸ்வின் ஒழுங்காக விளையாடு இல்லையென்றால் அப்படியே ஓடிப் போய்விடு என்பது போலான கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியது வீடியோவில் தெரியவந்தது.

தற்பொழுது இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் விளக்கம் அளிக்கும் போது ” நான் அணியின் திண்டுக்கல் அணியின் கேப்டனாக இருந்து நடுவில் இந்திய அணிக்கு சென்று விடுகிறேன். இதனால் புதிய கேப்டன்கள் வந்து ஏதாவது குழப்பம் நடக்கிறது. எனவே என்னை தொடர்ந்து தக்க வைக்க வேண்டாம் என்று அணி உரிமையாளரிடம் கூறினேன். ஆனால் அவர் பிடிவாதமாக என்னை தக்க வைத்தார்.

- Advertisement -

மேலும் எஸ்.எஸ்.ராஜன் டிராபியில் இளம் தமிழக வீரர்களை கண்டறிவதற்காக ஐந்து குழுக்களை அனுப்பி வீரர்களை தேர்ந்தெடுத்தேன். அதில் ஒருவராக சரத்குமார் வந்தார். பயிற்சியின் போது காலை நகர்த்தி விளையாடுவது, ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப் அடிப்பது என மிகத் திறமையானவராக தெரிந்தார். பின் காலில் மிட் விக்கெட் திசையில் அடிக்கும் பந்தை ஸ்கொயர் லெக்கில் அடிக்க சொன்னேன், உடனே அவர் அதையும் செய்தார். இப்படி தானாகவும் திறமையானவராக பிறர் சொல்வதையும் புரிந்து கொண்டு மாற்றிக் கொள்ளக் கூடியவராக இருந்தார்.

மேலும் அந்தத் தொடர் முழுக்க நாங்கள் பல கேட்ச் வாய்ப்புகளை தவறவிட்டிருந்தோம். ஆனால் இறுதிப் போட்டியில் அவர் சிறந்த கேட்ச் வாய்ப்புகளை பிடித்து அசத்தினார். இறுதிப் போட்டியில் அவரை வெளியில் வைக்கும் சூழ்நிலையும் இருந்தது, ஆனால் அவர் உயிரைக் கொடுத்து விளையாடுகிறேன் என்று கேட்டு வாய்ப்பை வாங்கினார். மேலும் பிடி டீச்சராக இருந்து பிளேயராக அவர் வந்து செய்திருக்கும் விஷயங்கள் என்னை ஆச்சரியப்படுத்தக் கூடியவை.

இதையும் படிங்க : கேரளா டி20 லீக்.. முன்னாள் சிஎஸ்கே வீரர் உட்பட.. அதிக தொகைக்கு போன போல முதல் 5 வீரர்கள்

குறிப்பிட்ட அந்த போட்டியில் நடந்த சம்பவத்தை பற்றி கூற வேண்டும் என்றால், சரத்குமார் என்னுடைய பையன், விளையாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் வீரர்களாக எங்களுக்குள் நடக்கக் கூடியவர்களை வெளியில் இருப்பவர்களால் புரிந்து கொள்ள முடியாது. அதெல்லாம் விளையாட்டில் இயல்பானது. வெளியில் இருப்பவர்கள் இதை எப்படி வேண்டுமானாலும் பேசி கொள்ளட்டும் எனக்கு பிரச்சனை இல்லை” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -