இந்திய அணி விளையாட இருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் ஐசிசி சாம்பியன் டிராபி தொடர் இரண்டையும் கணக்கில் வைத்து இந்திய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் அதிரடியான முடிவுகளை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு இந்த மாதத்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது. இதில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் சாம்பியன்ஸ் டிராபிக்கு இந்திய அணிக்கு நல்ல பயிற்சியாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
கேஎல்.ராகுல் கோரிக்கை
ஆஸ்திரேலிய டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் துவக்க இடத்தில் சிறப்பாக செயல்பட்டு இருந்த கேஎல்.ராகுல் இந்திய டி20 அணியில் இல்லாத நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு கேட்டதாக செய்திகள் வெளியானது. ஒட்டுமொத்தமாக இங்கிலாந்து தொடரை புறக்கணித்து, அவர் நேரடியாக சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட விரும்பியதாக தெரிகிறது.
இந்த நிலையில் இந்திய தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் கேஎல்.ராகுல் இந்திய அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக இருக்கின்ற காரணத்தினால் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் கட்டாயம் விளையாட வேண்டும் என்று கூறி இருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது. இதன் காரணமாக அகர்கர் அதிரடியால் கேஎல்.ராகுல் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கு திரும்புகிறார் என்று கூறப்படுகிறது.
அஜித் அகர்கர் புது வியூகம்
இந்திய அணியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்படும் என்கின்ற செய்திகள் வெளியானது. இந்த நிலையில் அஜித் அகர்கர் சாம்பியன்ஸ் டிராபி பயிற்சிக்காக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற அனைத்து முன்னணி வீரர்களையும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் விளையாட வைக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க : சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணி அறிவிப்பு தேதி மாற்றம்.. என்ன காரணம்? – வெளியான புதிய செய்திகள்
மேலும் மிக முக்கியமாக மாற்றுத் துவக்க ஆட்டக்காரருக்கான இடத்தில் தற்போது சிறந்த பேட்டிங் ஃபார்மில் இருக்கும் ஜெய்ஸ்வாலை ஒருநாள் இந்திய கிரிக்கெட் அணியில் முதல் முறையாக அகர்கர் கொண்டு வர திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவரது அதிரடியின் காரணமாக அடுத்தடுத்து பல எதிர்பார்க்காத சம்பவங்கள் இந்திய வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் நடைபெற இருக்கிறது.