அபிஷேக் ஷர்மா தொடர்ந்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பெரிய ரன்கள் எடுக்க முடியாமல் சிரமப்பட்டு வருவது குறித்து இந்திய முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கருத்து தெரிவித்திருக்கிறார்.
நேற்று தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 8 பந்துகளை சந்தித்த அபிஷேக் சர்மா 7 ரன்கள் எடுத்து பந்தை தூக்கி அடித்து கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். ஐபிஎல் தொடரில் அவரிடம் பார்த்த சீரான அதிரடி ரன் குவிப்பை சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பார்க்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 200க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் 200க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்த காரணத்தினால் இந்திய டி20 அணியில் அவருக்கு இடம் கிடைத்தது. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தனது முதல் அறிமுக போட்டியில் ரன் இல்லாமல் ஆட்டம் இழந்த அவர், இரண்டாவது டி20 போட்டியில் அதிரடியாக சதம் அடித்து அசத்தினார்.
மேற்கொண்டு அவரிடமிருந்து ஒரு பெரிய ரன் ஆறு இன்னிங்ஸ்களாக வரவில்லை. எமர்ஜிங் ஆசியக் கோப்பை தொடரிலும் அவரின் திறமைக்கேற்ற வகையில் அவர் விளையாடவில்லை. வெளியில் இந்திய டி20 அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக விளையாட பல வீரர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே தற்போது அபிஷேக் சர்மா மீது நெருக்கடி உருவாக ஆரம்பித்திருக்கிறது.
இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் ராபின் உத்தப்பா கூறும் பொழுது “அபிஷேக் ஷர்மா போன்ற ஒருவரிடம் நான் சீரான ரன் குவிப்பை எப்பொழுதும் எதிர்பார்க்க மாட்டேன். 2000ன் முற்பகுதியில் வீரேந்திர சேவாக்கை இந்திய அணியில் சுதந்திரமாக விட்டது போல தற்பொழுது இவரையும் நான் சுதந்திரமாக விட்டு விடுவேன். அவர் களத்திற்கு போய் மகிழ்ந்து விளையாடட்டும் என்று அனுமதிப்பேன.
இதையும் படிங்க : இங்கிலாந்து டி20.. வேற லெவல் வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு.. 3 அதிரடி வீரர்கள் வருகை.. கோச் மகிழ்ச்சி
“ஏனென்றால் அவரிடமிருந்து ரன் வந்தால் ஒரு மேட்ச் வின்னிங் சதம் வரும் இல்லையென்றால் பெரிய 80 ரன்கள் வரும். அவர் விரைவான தொடக்கத்தைப் பெற்று அணிக்கு சேவை செய்யக்கூடியவர். அவருக்கான ரோல் என்னவென்று அணியில் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. எனவே இப்படி இருக்கும் பொழுது அவர் நின்று விளையாடி தொடர்ந்து ரன்கள் பற்றி நான் கவலைப்பட மாட்டேன் என்று கூறி இருக்கிறார்”