நேற்று ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் குஜராத் டைட்டன்ஸ் அணி தோல்வி அடைவதற்கு முக்கிய காரணம் அந்த அணியின் கேப்டன் சுப்மன் கில் கொண்டு வந்த திட்டம்தான் என ராபின் உத்தப்பா விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்த போட்டியில் பந்துவீச்சில் குஜராத் டைட்டன்ஸ் அணி 228 ரன்களை விட்டு தந்தது. அணியின் முக்கிய பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் இங்கிலாந்து வேலைக்காக நாடு திரும்பிவிட்ட நிலையில், இந்த பெரிய ஸ்கோர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சிரமத்தை கொண்டு செய்தது.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் பலமாக எப்பொழுதும் பந்து வீச்சு இருந்து வந்திருக்கிறது. அந்த அணி உருவாக்கப்பட்டதிலிருந்து இதுவரையில் மிடில் ஆர்டர் எப்பொழுதுமே இருக்காது. டாப் ஆர்டர் மற்றும் பினிஷர்களை வைத்துதான் அவர்களுடைய பேட்டிங் யூனிட் கட்டப்பட்டிருக்கும். இந்த முறையும் அப்படியேதான் அமைந்திருந்தது.
அதே சமயத்தில் குஜராத் எப்பொழுதும் பந்து வீச்சு யூனிட்டை மிகவும் வலிமையாக அமைத்துக் கொள்ளும். இந்த முறையும் அதே போல அமைக்கப்பட்டது. கடைசி இரண்டு மூன்று போட்டிகளுக்கு முன்பு வரையில் அவர்களது பௌலிங் யூனிட் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வந்தது. குறிப்பாக பிரசித் கிருஷ்ணா மிடில் ஓவர்களில் அற்புதமாக பந்து வீசி இருந்தார்.
இந்த நிலையில் நேற்றைய போட்டியில் பவர் பிளேவில் உடனடியாக பிரசித் கிருஷ்ணா பந்து வீச வந்தார். அதே சமயத்தில் அந்த இடத்தில் பந்து வீசுவதற்கு ஜெரால்டு கோட்சி அணியில் இருந்தார். மேலும் முதல் ஓவரை சிக்கனமாக வீசிய அவர் இரண்டாவது ஓவரில் 26 ரன் விட்டு தந்தார். இந்த இடத்திலிருந்து குஜராத் அணிக்கு பிரச்சனைகள் ஆரம்பித்தது.
இதையும் படிங்க : 557 ரன்.. கருண் நாயர் இரட்டை சதம்.. ஜடேஜாவுக்கு மாற்று வீரர் கண்டுபிடிப்பு.. இங்கி ஏ vs இந்தியா ஏ
இதுகுறித்து பேசி இருக்கும் ராபின் உத்தப்பா கூறும் பொழுது ” குஜராத் அணியின் யுக்தி என்பது முன்னோக்கி செல்வதை விட தற்காப்பு செய்வதாகவே இருந்தது. அவர்களின் பிரசித் கிருஷ்ணா மிடில் ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டு வந்தார். ஆனால் கேப்டன் கில் அவரை முக்கியமான போட்டியில் பவர் பிளேவுக்கு கொண்டு வந்தார். அவர் தனது இரண்டாவது ஓவரில் 26 ரன் கொடுத்து விட்டார். மேலும் அவர்கள் கையில் வந்த கேட்ச் எல்லாவற்றையும் விட்டார்கள். இப்படி கேப்டனின் திட்டம் சரியில்லாத பொழுது கேட்ச் வாய்ப்பையும் விட்டால் எந்த போட்டியையும் வெல்ல முடியாது” என்று கூறியிருக்கிறார்.