ஐபிஎல் தொடரை மட்டம் தட்டி பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரை உயர்த்திப் பேசிய பாகிஸ்தான் பத்திரிகையாளருக்கு ராபின் உத்தப்பாவின் அதிரடி பதில்

0
84

ஐபிஎல் தொடரில் ராபின் உத்தப்பா 2008ஆம் ஆண்டு மும்பை அணியிலும், 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டில் பெங்களூரு அணியிலும், 2011 முதல் 2013 ஆம் ஆண்டு வரையில் புனே அணியிலும், 2014 முதல் 2019ஆம் ஆண்டு வரையில் கொல்கத்தா அணியிலும் விளையாடினார்.

குறிப்பாக 2014 ஆம் ஆண்டு கொல்கத்தா அணிக்கு 16 போட்டிகளில் 260 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்றார். அந்த ஆண்டு கொல்கத்தா அணி இரண்டாவது ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. கொல்கத்தா அணியின் வெற்றிக்கு ராபின் உத்தப்பா முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பின்னர் 2020ம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடிய அவர் கடந்த ஆண்டு சென்னை அணியில் விளையாடினார். கடந்த ஆண்டு சென்னை அணிக்கு நான்கு போட்டிகளில் மட்டுமே அவர் விளையாடி இருந்தார்.

முதல் சுற்று ஆட்டத்தில் டெல்லி அணிக்கு எதிராக 44 பந்துகளில் 63 ரன்களும் இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக 15 பந்துகளில் 31 ரன்கள் குவித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். முக்கிய நேரத்தில் ராபின் உத்தப்பா சிறப்பாக விளையாடியதால் மீண்டும் அவரை சென்னை அணி சமீபத்தில் நடந்து முடிந்த மெகா ஏத்தில் இரண்டு கோடி ரூபாய்க்கு கைப்பற்றியுள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு தயாராகி வரும் அவர் பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் ஒருவருக்கு அதிரடியான பதிலை டுவிட்டர் வலைத்தளத்தில் கொடுத்திருக்கிறார்.

பாகிஸ்தான் பத்திரிகையாளருக்கு பதிலடி கொடுத்த ராபின் உத்தப்பா

நேற்று ட்விட்டர் வலைதளத்தில் பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் ஒருவர் ஒரு பதிவிட்டிருந்தார். அந்த பதிவில் “பாகிஸ்தான் சூப்பர் லீக் மற்றும் இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளுக்கு எந்தவித ஒப்பீடும் இல்லை. இந்தியன் பிரீமியர் லீக் தொடர் 2008ஆம் ஆண்டு துவங்கப்பட்டது அதேசமயம் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

- Advertisement -

ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் பொழுது மார்க்கெட்டில் அந்த தொடருக்கு எந்தவித போட்டியாளரும் இல்லை. அதன் பின்னரே ஒவ்வொரு கிரிக்கெட் வாரியமும் லீக் தொடர் நடத்தினார்கள். தற்பொழுது இதன் அடிப்படையில் பார்க்கும் பொழுது 2016ம் ஆண்டு தொடங்கிய பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் மிக குறுகிய நேரத்தில் உலக அளவில் அதிக ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதை அனைவரும் ஒப்புக் கொள்ள வேண்டும்”என்று கூறியிருந்தார்.

அவரது பதிவுக்கு கீழ் ராபின் உத்தப்பா அதிரடியான பதில் ஒன்றை கொடுத்து இருந்தார். மார்க்கெட்டை உருவாக்கியதே ஐபிஎல் தான்.ஐபிஎல் இல்லாவிட்டால் உலகில் எந்த லீக்கிற்கும் தற்பொழுது மார்க்கெட் இருந்திருக்காது என்பது போல சாமர்த்தியமான பதில் ராபின் உத்தப்பா அளித்திருந்தார்.

ராபின் உத்தப்பா இவ்வாறு அதிரடியாக பதிலளித்த பதிவு தற்பொழுது சமூகவலைதளத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி கொண்டிருக்கிறது.