2024 டி20 உலகக்கோப்பை.. பாகிஸ்தான் அயர்லாந்து அணியிடம் தோற்கும்.. இதான் காரணம் – ராபின் உத்தப்பா கருத்து

0
24
Uthappa

நடக்க இருக்கும் ஐசிசி டி20 உலக கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, அமெரிக்கா, கனடா என ஐந்து அணிகள் ஒரே பிரிவில் இடம் பெற்று இருக்கின்றன. இந்த நிலையில் பாகிஸ்தான் அணி அயர்லாந்து அணியிடம் அதிர்ச்சி தோல்வி அடையும் என ராபின் உத்தப்பா கூறியிருக்கிறார்.

இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கு பெறுகின்றன. 20 அணிகளும் ஒரு குழுக்களுக்கு ஐந்து அணி என நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றன. மேலும் ஒவ்வொரு குழுவில் இடம் பெற்று இருக்கும் அணிகளும் தங்கள் குழுவில் உள்ள மற்ற அணியுடன் ஒரு முறை மோத வேண்டும்.

- Advertisement -

மேலும் பாகிஸ்தான அணி இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்யும் முன்பு அருகில் உள்ள அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முதல் போட்டியில் அயர்லாந்து அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது இது குறித்து பேசி இருக்கும் ராபின் உத்தப்பா கூறும் பொழுது ” ஐசிசி நடத்தும் தொடர்களில் ஏதாவது ஒரு போட்டியில் சிறிய அணியிடம் பாகிஸ்தான அணி தோல்வியடையும். இதுவரை நடந்துள்ளது பார்த்தால் இதை தெரிந்து கொள்ளலாம். மேலும் ஆசிய கோப்பையில் கூட அவர்களுடைய பீல்டிங் மோசமாக இருந்தது. இந்த வகையில் அவர்கள் அயர்லாந்து அணியிடம் தோல்வி அடைவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு.

அயர்லாந்து அணியில் பால் ஸ்டெர்லிங் மிகவும் குறைவாக மதிப்பிடப்பட்ட ஒரு வீரராக இருக்கிறார். அவர் உலகமெங்கும் நடக்கும் டி20 லீக்குகளில் கலந்து கொண்டு மிகச் சிறந்த கிரிக்கெட் விளையாடி வருகிறார். அவரது பேட்டிங் அணுகுமுறை சிறப்பான ஒன்றாக இருக்கும். மேலும் விக்கெட் கீப்பிங் கேப்டன் டக்கர் சிறப்பாக இருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : உறுதியா சொல்றேன்.. டி20 உலக கோப்பையில் இந்த இந்திய வீரர் தான் அதிக ரன்கள் எடுப்பார் – பிரையன் லாரா உறுதி

மேலும் அயர்லாந்து பந்துவீச்சு தாக்குதலும் சிறப்பாக இருக்கிறது அதை வேகப்பந்துவீச்சாளர். ஜோஸ் லிட்டில் வழி நடத்துகிறார். இவரும் உலகமெங்கும் நடக்கும் டி20 லீக்குகளில் சென்று சிறப்பாக விளையாடுகிறார். ஐபிஎல் தொடரிலும் இவர் சுவாரசியமான ஒருவராக இருந்தார். இவர் மெதுவாக பந்து வீசுவது போல தெரியும் ஆனால் வேகமாகவே வீசுகிறார்” என்று கூறியிருக்கிறார்.