இந்திய அணியின் ஆல்ரவுண்டரும் ஐபிஎல் சூப்பர் ஸ்டாருமான ரியான் பராக், மீண்டும் அணிக்கு திரும்புவது குறித்து திறந்து பேசியுள்ளார். சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான பராக், காயம் காரணமாக பல்வேறு போட்டிகளில் விளையாட முடியாத நிலையில் உள்ளார்.
24 வயதான ரியான் பராக், கடந்த ஆண்டு ஜிம்பாப்வேயில் நடந்த டி20 தொடரில் இந்திய அணிக்கு அறிமுகமானார். இதுவரை 1 ஒருநாள் போட்டி மற்றும் 9 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒரே ஒரு ஒருநாள் போட்டியில் 15 ரன்கள் மட்டுமே எடுத்தாலும், 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
மீண்டும் விளையாடுவேன்:
அதேநேரம் டி20 போட்டிகளில் 151.42 என்ற சிறப்பான ஸ்ட்ரைக் ரேட் கொண்டுள்ளார். 2025-26 சையது முஷ்தாக் அலி டிராபி போட்டியின் போது ரியான் பராக், செய்தியாளர்களை சந்தித்தார்.
அதில்,“இந்திய அணிக்காக நான் விளையாடியது மிகவும் நன்றாகவே இருந்தது என்று நினைக்கிறேன்.”
“இது என் நம்பிக்கையாகவோ அல்லது அதீத நம்பிக்கையாகவோ இருக்கலாம். நீங்கள் எப்படி வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம். ஆனால் என் தோள்பட்டை காயம் காரணமாகத்தான் தற்போது இந்திய அணியில் இல்லை.”
சமீபத்திய செயல்பாடுகள்:
“இல்லையெனில் இரு வெள்ளைப்பந்து வடிவங்களிலும் விளையாட முடியும் என்று எனக்குத் தெரியும். முழு உடற்தகுதியுடன் இருக்கும்போது மீண்டும் இந்திய ஜெர்சியில் என்னைக் காண்பீர்கள். இதுபோன்ற கட்டங்களை நான் பலமுறை சந்தித்திருக்கிறேன்.”
“உள்ளூர் கிரிக்கெட் மற்றும் ஐபிஎல்லில் 3-4 ஆண்டுகள் மிகக் கடுமையாக போராடிருக்கிறேன். இப்போதும் காயத்தில் இருந்து திரும்பி வருவதால், அதை மனதில் வைத்துக்கொண்டு செயல்பட வேண்டியிருக்கிறது.” என்றார்.
ஆனால் தற்போதைய சையது முஷ்தாக் அலி டி20 தொடரில் ரியானின் பேட்டிங் ஃபார்ம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.
குளியலறையில் அழுதேன்:
5, 15, 14, 0, 5 என்று ஐந்து இன்னிங்ஸ்களில் மொத்தம் 39 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.. அசாம் அணி எலைட் குரூப் ஏயில் 5 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. “இரண்டு சையது முஷ்தாக் அலி சீசன்களில் 7 போட்டிகளில் 45-50 சராசரியுடன் ரன்கள் குவித்தேன். அதேநேரம் ஐபிஎல்லில் 14 போட்டிகளில் 70 ரன்கள் கூட எடுக்க முடியவில்லை. ரன்கள் வராததால் குளியலறையில் அழுதிருக்கிறேன்.”
இதையும் படிங்க:
“பயிற்சி செய்யலாமா, ஒன்றும் செய்யாமல் விட்டுவிடுவோமா அல்லது விடுமுறை செல்லலாமா என்று யோசித்திருக்கிறேன். இந்த முஷ்தாக் அலி தொடி என்பது தசை muscle memory மீட்டெடுப்பதற்காக மட்டுமே. இங்கு ரன்கள் அடித்தால் மிக நன்று. அடிக்கவில்லை என்றால் ஐபிஎல்லில் அடிக்க மாட்டேன் என்று அர்த்தமில்லை. இதற்கு முன்னாலும் இங்கு ரன்கள் அடித்துவிட்டு ஐபிஎல்லில் தோல்வியடைந்திருக்கிறேன்.” என்று ரியான் பராக் கூறியுள்ளார்.
கடந்த ஐபிஎல் 2025 சீசனில் ரியான் பராக் 14 போட்டிகளில் 166.75 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 393 ரன்கள் குவித்து 32.75 சராசரி பெற்றார். சஞ்சு சாம்சன் இல்லாத சில போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைத் தலைமை தாங்கியும் விளையாடினார்.






