இன்று சிஎஸ்கே அணிக்கு எதிராக 15 பந்தில் வைபவ் சூரியவன்சி தனது அதிவேக ஐபிஎல் அரைசதத்தை அடித்தார். இது குறித்து அவரது ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ரியான் பராக் பேசியிருக்கிறார்.
இந்த போட்டியில் மொத்தம் 17 பந்துகளை சந்தித்த வைபவ் சூரியவன்சி நான்கு பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்கள் உடன் 52 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றியை எளிதாக்கி கொடுத்தார்.
வெளியில் பேசப்பட்ட விஷயம்
கடந்த ஐபிஎல் தொடர் வைபவ் சூரியவன்சிக்கு முதல் தொடர் என்கின்ற காரணத்தினால் அவர் குறித்து எதுவும் தெரியாததால் பவுலர்கள் விட்டு விட்டார்கள் என்றும், இந்த முறை எதிரணி பவுலர்கள் அவர் மீது பாய்ந்து விடுவார்கள் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் கடந்த சீசனின் விளையாடியதை விட சிஎஸ்கே அணிக்கு எதிரான இந்த ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் வைபவ் சூரியவன்சி அதிரடியாக விளையாடி இருக்கிறார். இதன் மூலம் தன்னால் எந்த சவாலையும் சமாளிக்க முடியும் என்று தெரிவித்திருக்கிறார்.
நான் அவரிடம் இதை சொன்னேன்
இதுகுறித்து ரியால் பராக் பேசும் பொழுது “நான் வைபவ் சூர்யவன்சியிடம் ‘நீ 14 போட்டிகளையும் விளையாடப் போகிறாய். அதில் என்ன நடந்தாலும் அது உன்னை பாதிக்க கூடாது. வெளியில் மீடியாக்களில் என்ன பேசப்படுகிறது என்று நீ கவலைப்பட கூடாது. நீ உன்னுடைய ஆட்டத்தை ஆடு’ என்று சொன்னேன்”
இதையும் படிங்க :
“மேலும் அவனுக்கு பேட்டிங் செய்வது மிகவும் பிடித்த விஷயம். எனவே அவன் விரும்பும் வரையில் பேட்டிங் செய்வதற்கு வசதிகளை செய்து தர பயிற்சியாளர்களிடம் கூறியிருந்தேன். முதல் நான்கு ஓவர்கள் அவன் விளையாடிய விதத்தை வெளியில் இருந்து பார்த்த நானும் ஜுரலும் ‘இவனால் மட்டும் இப்படி எப்படி முடிகிறது?’ என்று ஆச்சரியமாக பேசிக்கொண்டு இருந்தோம்” எனக் கூறியிருக்கிறார்.






