ஐசிசி t20 உலக கோப்பை தொடர் ஜூன் இரண்டாம் தேதி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் துவங்குகிறது. இந்த முறை 20 அணிகளை கொண்டு துவங்குகின்ற காரணத்தினால் இரண்டு சுற்றுகள் மற்றும் புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இவர்கள் குறித்து விரிவாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
குழு ஏ: இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, அயர்லாந்து, கனடா.
குரூப் பி: இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நமீபியா, ஸ்காட்லாந்து, ஓமன்.
குழு சி: மேற்கிந்திய தீவுகள், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், உகாண்டா, பப்புவா நியூ கினியா.
குழு டி: தென்னாப்பிரிக்கா, இலங்கை, பங்களாதேஷ், நெதர்லாந்து, நேபாளம்.
மேற்கண்டது போல் 20 அணிகளும், ஒரு குழுவுக்கு 5 அணிகள் வீதம் நான்கு குழுவாக பிரிக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு குழுவிலும் இருக்கும் அணிகள் தங்கள் குழுவில் இருக்கும் மற்ற அணிகளுடன் பொறுப்போட்டியில் மோதும். இதன் முடிவில் ஒரு குழுவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றான சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெறும்.
சூப்பர் 8 சுற்றில், ஒரு குழுவுக்கு நான்கு அணிகள் வீதம் எட்டு அணிகளும் இரண்டு பிரிவாக பிரிக்கப்படும். இதில் இரண்டு குழுவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் நான்கு அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறும். அதில் வெற்றி பெறும் இரண்டு அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பது நாம் அறிந்ததே!
இதில் முக்கியமாக ஒரு புதிய விதியாக, முதல் சுற்றின் போது எந்த அணி அதிக வெற்றிகளை பெற்று புள்ளிகளை அதிகம் வைத்திருக்கிறதோ அந்த அணி அந்த குழுவில் முதல் இடத்தில் இருக்கும். அதே சமயத்தில் இரண்டு அணிகள் ஒரே அளவில் புள்ளிகள் எடுத்து இருந்தால், யார் அதிக ரன் ரேட்டில் இருக்கிறார்களோ அவர்கள் முதல் இடத்திலும் இரண்டாவது இடத்திலும் இருப்பார்கள். மேலும் இரண்டுக்கும் மேற்பட்ட அணிகள் ஒரே அளவில் புள்ளிகள் எடுத்து இருந்தால், அவர்கள் மோதிக்கொண்ட போட்டியில் யார் வெற்றி பெற்று இருக்கிறார்கள் என்று பார்க்கப்படும். அதன் அடிப்படையில் இரண்டு அணி தகுதி பெறும்.
இதையும் படிங்க : டி20 உலககோப்பை.. இந்த டீம்கிட்ட கவனமா இருங்க.. விட்டா சாம்பியன் ஆயிடுவாங்க – கவுதம் கம்பீர் பேட்டி
மேலும் ஒவ்வொரு குழுவிலும் இடம்பெறும் ஐந்து அணிகளும் வரிசையாக வைக்கப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக தற்பொழுது இந்தியா இடம்பெற்று இருக்கும் குழுவில் இந்தியாவின் பெயர் முதல் இடத்திலும் பாகிஸ்தான் பெயர் இரண்டாவது இடத்திலும் இருக்கும். ஒருவேளை மழை வந்து இந்தியா இடம் பெற்றிருக்கும் குழுவில் ஒரு போட்டி கூட நடைபெறவில்லை என்றால், அந்தக் குழுவில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இதுபோல நான்கு குழுக்களிலும் எட்டு அணிகளுக்கு முதல் இரண்டு இடங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஒரு போட்டி கூட லீக் சுற்றில் ஒரு குழுவில் நடக்காமல் போகும்போது, தற்போது முதல் இரண்டு இடங்கள் கொடுக்கப்பட்டிருக்கும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் புதிய விதி கொண்டுவரப்பட்டிருக்கிறது.