ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ஆர்சிபி அணி சொந்த மண்ணில் 2 போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்கிறது. எனினும் வெளியூர் மைதானங்களில் அபாரமாக விளையாடி வருகிறது. தற்போது ஆர்சிபி அணி 5 போட்டிகளில் விளையாடி மூன்று வெற்றி இரண்டு தோல்வி என 6 புள்ளிகள் உடன் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.
இந்த நிலையில் rcb அணி தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்த போட்டியில் ஆர்சிபி அணி பச்சை நிற ஜெர்சியில் விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி கேப்டன் ரஜத் பட்டிதார், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை அடுத்து களம் இறங்கிய ராஜஸ்தான் அணி வீரர்கள் அதிரடியாக ஆட முயற்சி செய்தனர்.
பச்சை நிற ஜெர்சி ஏன்?
19 பந்துகள் எதிர் கொண்டு வெறும் 15 ரன்கள் மட்டுமே சஞ்சு சாம்சன் சேர்த்தார். மறுபுறம் தொடக்கவீரர் ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடி 35 பந்துகளில் அரை சதம் கடந்தார். அவருக்கு ரியான் பராக் நல்ல உறுதுணையாக நின்று ஆடி வருகிறார். இதன் மூலம் ராஜஸ்தான் அணி 12.5 ஓவர்கள் எல்லாம் 100 ரன்களை கடந்து விளையாடி வருகிறது.
இந்த சூழலில் ஆர் சி பி அணி இன்று பச்சை நிற ஜெர்சியை அணிந்து விளையாடி வருகிறது. இதற்கான காரணம் என்ன என்று கேட்கப்பட்டபோது, அதற்கு பதில் அளித்த ரஜத் பட்டிதார், ஆர் சி பி அணி ஆண்டுதோறும், ஒரு போட்டியில் பச்சை நிற ஜெர்சியை விளையாடும். சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மரங்களை அதிக அளவு நட வேண்டும்.
கிண்டல் அடிக்கும் ரசிகர்கள்:
இதனால் தான் இந்த பச்சை நிற ஜெர்சியை தாங்கள் பயன்படுத்துகிறோம் என்று தெரிவித்துள்ளார். இதில் நடிகை ஆர் சி பி அணியின் இந்த ஜெர்சி மாற்றத்திற்கு ரசிகர்கள் கிண்டல் செய்துள்ளனர். ஜெர்சியை மட்டும் ஆண்டுதோறும் மாற்றுவதாகவும், ஆனால் ஒரு முறை கூட கோப்பையில் வெல்லவில்லை என்றும் கிண்டல் அடித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஐபிஎல் 2025.. ஒரே இன்னிங்சில் 141 ரன்கள்.. ஆரஞ்ச் தொப்பி இடத்தில் அபிசேக் சர்மாவுக்கு எந்த இடம்? பர்பிள் தொப்பியில் சிஎஸ்கே வீரர் முதலிடம்
இதற்கு பதிலடி கொடுத்துள்ள ஆர்சிபி, ஐபிஎல் தொடரில் ஒரு டாட் பால் விளையாடினால் இவ்வளவு மரங்கள் பிசிசிஐயால் நடப்படுகிறது.
அந்த வகையில் சிஎஸ்கே அணி தான் அதிக டாட் பால்களை விளையாடி சுற்றுச்சூழலுக்கு உதவுவதாக குறிப்பிட்டுள்ள ஆர்சிபி ரசிகர்கள், சிஎஸ்கே அணி தங்களுடைய ஜெர்சி யை மாற்ற வேண்டும் என்று பதிலடி கொடுத்திருக்கிறார்கள்.






